திரிபலா என்பது மூன்று மூலிகைகளால் ஆனது கடுக்காய், தான்றிக்காய்,நெல்லிக்காய். இது நாள்பட்ட மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச் சிறந்த மருந்து. மேலும் இது கண் நோய், தோல் நோய், வாய் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் அதிகப்படியான அசிடிட்டியை சரி செய்யக் கூடியது.
ஆயுர்வேத டாக்டர் வரலக்ஷ்மி அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் இதனை பகிர்ந்துள்ளார் அவர் கூறியதாவது, திரிபலா என்பது நம் அனைத்து நோய்களையும் குணமாக்கும் ஒரு சிறந்த மூலிகை. நோய்களைத் தீர்க்க பயன்படுத்தும் போது பல விதமான அதிசயங்களை நிகழ்த்துகிறது. நமது ஆரோக்கியத்துக்கு திரிபலா எந்த வகையில் நன்மை செய்கிறதென்று கட்டுரையின் வாயிலாக விரிவாகக் காணலாம்.
உடலின் வெளிப் புறத்தில் ஏற்படக்கூடிய காயங்களை ஆற்றும் பணியை அருமையாகச் செய்கிறது. இது அழற்சி எதிர்ப்புச் சக்தியை கொண்டு உள்ளதால் ஆற்றவே முடியாத சர்க்கரை வியாதி உள்ளவர்களின் காயங்களைக் கூட ஆற்றி விடும். தொற்று நோயை எதிர்த்துப் போராடி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
திரிபலா கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் சரி செய்து கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது. கண்களை திரிபலா கொண்டு கழுவினால் அது கண் வறட்சியைப் போக்கி கண் பிரச்சினையையும் குறைக்கும், கண்களில் தேங்கும் அழுக்குகளையும் நீக்குகிறது. கண்களைச் சுத்தப்படுத்தும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறது. இது கண்களில் ஏற்படும் புண், கண்ணிலும் கண் இமைகளிலும் கண் தொற்றால் ஏற்படும் சீழ் வடிதலையும் குணப்படுத்துகிறது.
ஷாம்பு போடுவதற்கு முன் திரிபலா பயன்படுத்தி முடியை அலசினால் பொடுகு மறைந்து விடும். திரிபலாவில் இருக்கும் கலவை பொருட்கள் பிளவு பட்ட முடியைச் சரிசெய்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதில் உள்ள முக்கிய பொருட்களான கடுக்காய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இது மயிர்க் கால்களில் செயல்பட்டு அனைத்து விதமான பூஞ்சை தொற்றுக்களையும் இல்லாமல் செய்து விடும்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் முடி வறண்டு காணப்படுகிறதா? இதோ வீட்டு வைத்தியம்!!!
திரிபலா வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாவை மட்டும் நீக்காமல் வாய் வழியாக உள் உறுப்புக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. திரிபலா பூஞ்சைகள் வளர்ச்சியைக் குறைத்து நம் வாயில் உருவாகக்கூடிய கேண்டிடா எனும் ஒரு வகை பூஞ்சை காளானைத் தடுக்கிறது மற்றும் வாயில் உண்டாகும் புண்களை ஆற்றுகிறது.
மூல நோயால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றால் வெதுவெதுப்பான திரிபலா நீரில் உட்காரலாம். இது நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, ஆசன வாயில் மற்றும் சிறுநீர்ப் பைகளில் உள்ள இரத்த குழாய்களை நெகிழ வைக்கிறது மற்றும் ஆசன வாய் பகுதியில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. திரிபலா ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கொண்ட ஒரு இயற்கை மலமிளக்கியாகச் செயல்பட்டு மலத்தை எளிதில் வெளியேற்றுகிறது
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]