பொதுவாக நாம் அனைவரும் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகர், இவற்றில் ஒன்றை தான் டிடாக்ஸ் பானமாக பருகுவோம். ஆனால் இதை தவிர நாம் பருக வேண்டிய மேலும் சில டிடாக்ஸ் பானங்களும் உள்ளன. குறிப்பாக நீங்கள் இருக்கும் கால நிலையை பொறுத்தும், உங்கள் உடல் நிலையை பொறுத்தும், நீங்கள் எப்படிப்பட்ட டிடாக்ஸ் பானம் பருக வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டு அதன் பிறகு அதை தயாரித்து பருகலாம்.
இன்று இந்த கட்டுரையில், மத்திய அரசின் ESIC மருத்துவமனையின் உணவுக்கலை நிபுணர் ரிது பூரி அவர்கள் குளிர் காலத்தில் பருக வேண்டிய பானங்களை பற்றி நமக்கு தெரிவிக்கிறார்.
இதுவும் உதவலாம்:குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு 1 பல் பூண்டு போதும்!!
குளிர் காலத்தில் சருமம் வரண்டு போகும். சில சமயம் இந்த வறட்சி நம் கண்கள் வரை சென்று தாக்கும், இதனால் கண்கள் மங்கலாக கூட தெரிய ஆரம்பிக்கும். ஒரு வேளை இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், நீங்கள் ஆரஞ்சு பழம் மற்றும் கேரட் சாறு தயாரித்து அதை டிடாக்ஸ் பானமாக வெறும் வயிற்றில் குடிக்கலாம். இந்த இரண்டு பொருட்களிலும் வைட்டமின் A மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகப்படியாக நிறைந்து உள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் இத்துடன் சேர்ந்து பீட்ரூட் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும் பட்சத்தில் மறந்தும் கூட இந்த டிடாக்ஸ் பானத்தை பருக கூடாது.
குளிர் காலத்தில் அதிகப்படியாக இதய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நிறைய ஆய்வுகளின் கணிப்பு படி குளிர் காலத்தில் தான் அதிகமான மாரடைப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், மாதுளை மற்றும் பீட்ரூட் சேர்த்து டிடாக்ஸ் பானமாக குடிக்கலாம். மாதுளை உடலில் ரத்த ஓட்டத்தை மட்டும் மேம்படுத்தவில்லை, நம் இதயத்தையும் பலம் வாய்ந்ததாக மாற்ற உதவுகிறது. அதே நேரத்தில் எக்கச்சக்கமான வைட்டமின் A சத்து பீட்ரூட்டில் நிறைந்து உள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும், இது நம் உடலின் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஒரு வேளை உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை அல்லது PCOD பிரச்சனை இருந்தால், நிச்சயம் நீங்கள் இந்த பானத்தை பருகுவதை தவிர்க்க வேண்டும்.
இதுவும் உதவலாம்:தினமும் வெந்தய டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
உங்களுக்கு மஞ்சள் காமாலை அல்லது கல்லீரல் பிரச்சனை இருந்தால், நீங்கள் இந்த டிடாக்ஸ் பானத்தை பருகலாம். வெறும் வயிற்றில் இளநீர் பருகுவது நம் கல்லீரலை பலப்படுத்தும். நீங்கள் விரும்பினால், இதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் பணியை இது சிறப்பாக செய்கிறது. பொட்டாசியம் மற்றும் ஒமேகா 3 இவ்விரண்டும் இளநீரில் நிறைந்துள்ளது. இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயத்தில், உங்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது PCOD பிரச்சனை இருந்தாலும் இதை குடிக்கலாம்.
குளிர் காலத்தில் சளியும், காய்ச்சலும் திரும்ப திரும்ப வந்து போகும். எனவே இதற்கு காலையில் வெறும் வயிற்றில் டிடாக்ஸ் பானத்தை குடிக்கலாம். இந்த பிரச்சனைக்கு இஞ்சி, எலுமிச்சை சேர்த்த மூலிகை தேநீர், கிரீன் டீ அல்லது மூலிகை டீ கூட குடிக்கலாம். நீங்கள் இதை எந்த வெப்ப நிலையிலும் தயாரிக்கலாம். நம் தொண்டையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் காய்ச்சலை இல்லாமல் செய்து விடுவதுடன், நம் உடலையும் சூடாக வைக்க உதவுகிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]