குளிர் காலத்தை பொறுத்தவரை நாம் நம் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். ஏனெனில் இந்த காலத்தில் தான் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை அதிகமாக உருவாகிறது. மேலும் குளிர் காலத்தில் சூடான மற்றும் சத்தான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க பூண்டில் உள்ள மூலிகை மற்றும் கார தன்மை வழி வகிக்கிறது. பல நிபுணர்கள் தினமும் பூண்டு உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
ஒவ்வொரு சமையலறையிலும் இருக்கும் மிக முக்கியமான பொருள் பூண்டு, ஒரு வித வாசம் மற்றும் சுவையையும் உடனடியாக உணவில் சேர்க்க வல்லது. பூண்டில் வைட்டமின்கள், மினரல்கள், கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இது நம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட ஆர்ஜினைன், ஆலிகோசேக்கரைட்ஸ், செலினியம் மற்றும் பிளாவனாயிட்ஸ் போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இத்துடன் ஆன்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி இன்பிளமேட்டரி, ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இவை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இதுவும் உதவலாம்:கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்
குளிர் காலத்தில் உடல் எடை குறைப்பது நமக்கு ஒரு சவாலாக இருக்கும். ஒரு பூண்டு பல் உங்களுடைய வேலையை சுலபமாக்கி விடும். பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் இருக்கிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி விட்டு, வளர்சிதை மாற்றத்திற்கு ஒரு நல் வழியை அளிக்கிறது.
இந்த பொருட்கள் நம்முடைய அதிகப்படியான உடல் எடையை குறைக்கிறது. நிபுணர்கள் கூற்றுப்படி தினமும் காலையில் பச்சையாக பூண்டு மற்றும் தேன் அல்லது தேனில் ஊறிய பூண்டு உட்கொண்டு வந்தால் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். இதை நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தால், உங்களுக்கு கண்கூடாக மாற்றங்கள் தெரியும்.
பூண்டு அதிகப்படியான சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் குறைந்த கலோரிகள் தான் உள்ளன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் உள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
பூண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் சேர்ந்த கலவைகளை கொண்டு உள்ளது. எனவே இது நம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தினசரி பூண்டு சாப்பிட்டு வந்தால் வைரஸ் போன்ற கிருமிகளை விரட்டும் சக்தியை உடலுக்கு அளிக்கும். பூண்டினை நீங்கள் பல விதமான வழிகளில் சாப்பிடலாம், அதை பச்சையாக உட்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
நீங்கள் ஒரு இதய நோய் உள்ளவர் என்றால் உங்களுக்கு பூண்டு அதிக பயனை தரும். உணவு நிபுணர்கள் கூற்றின்படி தினசரி பூண்டு உட்கொண்டு வந்தால் அது இதயத்தை காக்கும் கவசமாக இருக்கும், மேலும் இதய நாள நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பிரச்னைகளை தீர்க்கும். நீங்கள் உடல் நலம் திடமாக வைத்து கொள்ள விரும்பினால், சர்க்கரை அளவை சீராக வைக்க விரும்பினால், நிச்சயம் நாள்தோறும் பூண்டு சாப்பிட மறக்க கூடாது.
இதுவும் உதவலாம்:உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?
சளி, இருமலுக்கு அருமருந்து
பூண்டில் கிருமிகளை அழிக்கும் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. மாயாஜாலம் நிகழ்த்த கூடியதாக கருதப்படும் இந்த பூண்டு சந்தேகமில்லாமல் நம் வெவ்வேறு சீதோஷ்ன பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
அல்லிசின் எனப்படும் பொருளானது ஆற்றல் மிக்க சல்பர் கலவையை உட்கொண்டு உள்ளது. இது பூண்டின் உள்ளே இருப்பதால் இது பொதுவான சளித் தொல்லை பிரச்சினைக்கு தீர்வு காண உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
எனவே பூண்டினை சாப்பிட்டு மேற்கூறிய அனைத்து பலன்களையும் பெற்று கொள்ளுங்கள். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]