நம் சமையல் அறையின் அஞ்சரைபெட்டி மிளகின்றி நிறைவடையாது. உணவே மருந்து என்ற வாசகத்துக்கு இணங்க நாம் சமைக்கும் மிளகு ரசம், மிளகு குழம்பு என பெரும்பாலான உணவுகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவுகளை சமைக்கும் போது கடைசியாக ஒரு ஸ்பூன் மிளகு பொடி சேர்ப்பது உணவுக்கு நல்ல சுவையையும், மனத்தையும் தருகிறது. பொதுவாக நாம் சமைக்கும் போது காரத்திற்காக மிளகு மற்றும் பல வகையான மிளகாய்களை பயன்படுத்துகிறோம். ஆனால் காரத்திற்கு மிளகாய்க்கு பதிலாக மிளகை பயன்படுத்துமாறு உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான திருமதி அனுபமா கிரோத்ரா அவர்கள் அறிவுறுத்துகிறார்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிளகு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதனுடைய சிறந்த உறிஞ்சுதல் திறன் கால்சியம் சோடியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன. ஆராய்ச்சிகளின் படி, கருப்பு மிளகு குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த குடல் பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாடு, மனநிலை, நாள்பட்ட நோய்கள் மற்றும் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு சிலர் அதிகமாக சாப்பிடுவது அல்லது தவறான நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை கருப்பு மிளகாய் கொண்டு சரி செய்ய முடியும். நீங்கள் குடிக்கும் பானத்தில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம் இது உங்கள் பசியை குறைக்க உதவுகிறது.
கருப்பு மிளகில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. இது தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுகிறது. இதற்கு கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் தேனை பயன்படுத்தி கஷாயம் செய்து குடிக்கலாம்.
கருப்பு மிளகில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் பைபரின் எனும் கூட்டுப்பொருள் உள்ளது, இது செல் சேதத்தை குறைத்து திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. புதிதாக நுணுக்கிய கருப்பு மிளகு பொடியில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் உள்ளன, இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன.
கருப்பு மிளகில் உள்ள ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதாக பல பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேலை செய்யும் இடத்தில் அதிக மன அழுத்தத்தை சமாளிக்கும் நபர்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அதிகப்படியான உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் விளைவாகவும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதனை சீராக்க சரியான அளவு உப்பு எடுத்துக் கொள்வதோடு, மிளகையும் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அடிக்கடி பொரித்த உணவுகள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது இருதய நோய் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது.
உணவில் கருப்பு மிளகு சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலை குறைக்கும் விளைவுகளை கொண்ட உணவுப் பொருட்களான மஞ்சள் மற்றும் சிவப்பரிசியின் உறிஞ்சுதலை அதிகரிக்க அவற்றுடன் கருப்பு மிளகு சேர்த்து சமைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]