இஞ்சி நம் உடலுக்கு பல வகைகளில் நன்மையை அளிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது, அஜீரணக் கோளாறுகளை சரிசெய்கிறது, இன்னும் பற்பல நன்மைகளை செய்கிறது. இதன் வேரில் மிளகு போல் காரமான மணமும், ஒரு வித மருத்துவ குணமும் உள்ளது. இஞ்சி பல வகைகளில் பயன் தருகிறது, புத்தம் புதிய இஞ்சியாகவோ, காய்ந்த சுக்காகவோ, சுக்கு பொடியாகவோ, இஞ்சி எண்ணெய் அல்லது சாறாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ நமக்கு கிடைக்கிறது. உலகம் முழுவதிலும் சமையலுக்கு மட்டுமல்லாமல் மருத்துவத்திற்கும் பயன்பட்டு வருகிறது. இஞ்சியின் ஆரோக்கிய குறிப்புகளை நாம் இங்கு காணலாம்
1. செரிமான சக்தியை அதிகரிக்கும்
செரிமான தன்மையை பொறுத்தவரை இஞ்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளான வயிற்றில் அசௌகரியம், அதாவது நெஞ்சு கரிப்பு இஞ்சியினால் சரிசெய்ய படுகிறது. நம் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும் போது இந்த நெஞ்சு கரிப்பு ஏற்படும், அதற்கு ஒரே தீர்வாக இஞ்சி கருதப்படுகிறது. வாய்வு வயிற்றில் நிரம்பி இருக்கும் சமயத்தில் நமக்கு பசியில்லாமல் குமட்டுவது போல உணர்வு வரும், அந்த நேரத்தில் இஞ்சி சாப்பிட பசி உணர்வு வந்து விடும். எனவே இஞ்சி சாப்பிட செரிமான மண்டலம் துரிதமாக செயல்படும், அதன் விளைவாக நெஞ்சு எரிச்சல், அஜீரண பிரச்சினைகள் இல்லாமல் போய் விடும்.
2. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
உங்களுக்கு இஞ்சியின் தனித்துவமான கார சுவை, மூக்கை துளைக்கும் வாசனை, சுண்டி இழுக்கும் ருசி பற்றி தெரியுமா? இதற்கு காரணம் இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் எனப்படும் ஒரு வேதியியல் கலவை. இந்த கலவை நம் நாக்கில் உள்ள காரசுவை ஏற்பிகளை செயல்பட தூண்டி விடுகிறது. உடனடியாக உடலுக்கு ஒரு சத்து வேண்டுமானால், இஞ்சி சாலட் செய்து சாப்பிடலாம் அல்லது இஞ்சி டீ குடிக்கலாம். இஞ்சியிடம் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மைகளானது நம் உடலை சில வியாதிகள் அண்டாமல் பாதுகாக்கிறது மற்றும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இஞ்சி அனைவரும் அறிந்த பொதுவான உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் பொருள். இதை டீ செய்தும் பருகலாம் அல்லது தேன் கலந்தும் சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள் எவை தெரியுமா?
3. இயற்கையான ஆன்டி இன்பிளமேட்டரி
பைடோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் ஒரு வேதியியல் பொருள் இஞ்சியில் உள்ளது. இந்த பொருள் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் என்பதால் நம் உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது. செல்-சிக்னலிங் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலமும் வீக்கத்தை நிறுத்தலாம். நாம் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட பின் ஏற்படும் உடல் வலிகளை நீக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு.
4. இரத்த கொதிப்பை குறைக்கிறது
இஞ்சி நம் இரத்து நாளங்களை விரிவடைய செய்யும் ஆற்றல் பெற்றது, இதனால் இரத்த கொதிப்பை குறைக்கிறது. (இதை மாத்திரைகளுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்). இதன் விளைவாக உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், எனவே இரத்த கொதிப்பும் குறையும். பொட்டாஷியம் எனும் பொருள் இஞ்சியில் உள்ளது, இதுவும் நம் உடலில் இரத்த கொதிப்பை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. எளிமையாக குமட்டல் பிரச்சினையை தீர்க்கிறது
வயிற்றில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் எளிமையாக சரிசெய்யும் ஆற்றல் இஞ்சிக்கு மட்டுமே உள்ளது. கீமோதெரபி எடுத்து கொள்பவர்கள் மற்றும் காலை நேரத்தில் குமட்டல் பிரச்சினை கொண்டவர்களுக்கு இஞ்சி தான் சரியான தீர்வு என்று இதை பயன்படுத்தி பலன் பெற்ற பலர் கூறுகின்றனர். வயிற்றில் உள்ள செரோட்டினின் ஏற்பிகள் வயிற்றில் அடைப்பை உருவாக்கும். இஞ்சி தான் இந்த அடைப்பை சரி செய்கிறது என்று ஆய்வு கூடங்கள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதல் பலனாக, இது உணவு செரிமான தன்மையை விரைவு படுத்துகிறது. இதன் காரணமாக வயிற்றில் உள்ள பிரச்சினையை தீர்க்கிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation