இந்த பருவ காலத்தில் சூடாக ஏதாவது சாப்பிடுவது அல்லது குடிப்பது, போர்வைக்குள் சௌகரியமாக இருப்பதும் நம் அனைவரின் உணர்வாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. குளிர் காலம், நிச்சயமாக ஒருவருக்கு அதிகப்படியான பசியையும் உண்டாக்குகிறது, ஏனெனில் வெப்பநிலையில் ஏற்படும் வீழ்ச்சி பசியைத் தூண்டுகிறது.
காய்கறிகள், பருப்பு வகைகள், பாகற்காய், பார்லி ஆகியவற்றால் செய்யப்பட்ட சூப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும். இவை நம் உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருக்கின்றன. சீரகம், மிளகு மற்றும் இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களை உங்கள் சூப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மசாலாக்கள் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும். இஞ்சி, சீரகம், மிளகு, எள், இலவங்கப்பட்டை போன்ற சில கிட்சன் சூப்பர் ஸ்டார்ஸ் இதில் அடங்கும். இஞ்சியைத் தேநீர் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். உங்கள் உடலை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கச் சீரகம் உதவுகிறது. எனவே, உங்கள் சமையலில் சீரகத்தை சேர்த்து கொள்ளுங்கள். இலவங்கப்பட்டை தூளை சாலடுகள், ஜூஸ் வகைகளில் ஒரு சிட்டிகை சேர்க்கலாம். இரவு தூங்குவதற்கு முன் மஞ்சள் பொடி, மிளகு சேர்த்த பால் குடிப்பது கூடுதல் நன்மை அளிக்கிறது.
பூண்டு இந்த குளிர் காலத்திற்குச் சிறந்தது. இதனை பூண்டு குழம்பு, பூண்டு தொக்கு போன்ற வகையில் சேர்க்கலாம், இல்லையென்றால் இந்த எளிமையான முறையைப் பின்பற்றுங்கள். ஒரு கடாயில் நெய்யைச் சூடாக்கி நறுக்கிய பச்சை பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி உணவுடன் சேர்த்துச் சாப்பிடவும். நெய்யை நன்கு சூடாக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் மீதமுள்ள பொருட்கள் தானாகவே வெப்பத்தில் சமைக்கப்படும். நெய்யும் உடல் சூடாக்குவதற்குப் பெரிதும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: இயற்கையாகவே உடலை கதகதப்பாக வைத்துக்கொள்வது எப்படி என தெரியுமா?
கத்தரிக்காய் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைத்து உடல் பருமனையும் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்திரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டாக்கும். மேலும் புண்கள் ஆறவும் அதிக நாள் ஆகும். குளிர் காலத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு மற்றும் வற்றல் சமைத்து உண்ணலாம்.
இறைச்சி வகை உணவுகளான சிக்கன் அதிலும் குறிப்பாக நாட்டுக்கோழி, மீன் வகைகளில் மத்தி, நெத்திலி போன்றவை உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இவை இரும்பு மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: காலையில் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு கெடுதல் உள்ளதா!!!
எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைத் தேர்வு செய்யுங்கள் எந்த வகை உணவாக இருந்தாலும், சூடாக உண்ணும் பழக்கத்தைக் குளிர் காலத்தில் பின்பற்ற முயற்சி செய்யலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]