இயற்கையாகவே உடலை கதகதப்பாக வைத்துக்கொள்வது எப்படி என தெரியுமா?

குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக்கொள்ள இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

maintain the body warm in winter

குளிர்காலம் தொடங்கிவிட்டது, இந்த நேரத்தில் நம் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் நம் உடலை சூடாக வைத்துக்கொள்ள சில விஷயங்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பலர் குளிர்காலம் தொடங்கியவுடன் சூடான அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். குளிர்காலத்தில் சூடாக ஏதாவது குடித்தால் அல்லது சாப்பிட்டால் இதமாக இருக்கும். நம் உடலை சூடாக வைத்திருக்க எல்லா நேரமும் போர்வைக்குள்ளேயே இருக்க முடியாது. எனவே உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். இவை நம் உடலை சூடாக வைத்திருக்க உதவும்.

நம் வீட்டு சமையலறையிலேயே, உடலை சூடாக வைத்திருக்க உதவும் பல மசாலாப் பொருட்கள் உள்ளன, இது உங்களுக்கு தெரியுமா? இந்த மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால், குளிர்காலத்திலும் சூடாக இருக்கலாம். இந்த மசாலாப் பொருட்கள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. இன்று இந்த பதிவில், உடலை சூடாக வைத்திருக்க உதவும் மசாலா பொருட்களைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.

இலவங்கப்பட்டை

cinnamon for body warm

இந்த மசாலா பொருள் உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது எனவே இது குளிர்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை டீ, தண்ணீர், சூப் மற்றும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், மூட்டு வலியைக் குறைக்கவும்,, இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராடவும் இது உதவுகிறது. இது குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

மிளகு

black pepper for body warm

மிளகும் உடலை சூடாக வைத்திருக்க உதவும் மசாலா பொருளாகும். இதன் பலன்களை முழுமையாகப் பெற மிளகை இடித்து சாப்பிட வேண்டும். மிளகு மார்பு சளி பிரச்சனையையும் சரி செய்ய உதவும். கருப்பு மிளகை தேனுடன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும். இந்தியர்களுக்கு இது ஒரு வீட்டு டானிக் என்றே கூறலாம். இதை சூப், டீ மற்றும் உணவுகளில் தேர்த்து சாப்பிடலாம்.

துளசி

பெரும்பாலான வீடுகளில் துளசி வழிபாடு செய்யப்படுகிறது. துளசியும் உடலை சூடாக வைத்திருக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதனால் தான் குளிர்காலத்தில் அதிகமாக துளசி உட்கொள்ளப்படுகிறது. ஒரு நாளைக்கு 4-5 துளசி இலைகளை சாப்பிட்டால் போதுமானது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. துளசியில் உள்ள கேம்பீன், சினியோல் மற்றும் யூஜெனால் சளி மற்றும் மார்பு நெஞ்சு சளியை குறைக்க உதவுகின்றன. துளசி இலைகளின் சாற்றை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து சாப்பிடுவது மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, காய்ச்சல், இருமல் மற்றும் சளி ஆகியவை குறையும்.

இந்த பதிவும் உதவலாம்: துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

இஞ்சி

ginger for body warm

குளிர்காலத்தில் இஞ்சி டீ குடித்தால், குளிரில் இருந்து முழு நிவாரணம் கிடைத்ததை போல தோன்றும். இஞ்சியும் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் இது உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. குளிர் காலத்தில், இஞ்சி, துளசி, புதினா சேர்த்து தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இது செரிமான அமைப்பையும் மேம்படுகிறது. சளி மற்றும் காய்ச்சலை குணமாக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!!

கடுகு

கடுகு உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உணவில் கடுகு கீரையை சேர்த்துக் கொண்டால் பருவகால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதய நோய்கள், சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றையும் தவிர்க்கலாம். கடுகு விதைகள் உணவில் சேர்த்து சமைக்கப்படுகிறது. இது உணவை பதப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

சமையலறையில் இதுபோன்ற பல மசாலாப் பொருட்கள் உள்ளன, இவை நம் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP