டீ பற்றி நாம் பேசும்போது, இஞ்சி டீயின் மகிமை குறித்து பேசாமல் இருப்பதே கிடையாது. இஞ்சி டீயினை குடிக்க பலரும் ஆசைப்படுகின்றனர். ஒரு சிலருக்கு இந்த டீ குடிக்காமல் இருக்கவும் முடிவதுமில்லை. ஏனெனில், இஞ்சி டீ மிகவும் ஆரோக்கியமானது. இருமல் மற்றும் சளியை போக்க நமக்கு உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது ஓரளவுக்கு உண்மை எனினும், இன்று நாம் இஞ்சி பால் டீ பற்றி பார்க்க போவதில்லை. நாம் பார்க்கவிருப்பது நார்மல் இஞ்சி மூலிகை டீ பற்றியது தான்.
பால் பற்றிய கருத்துக்கள் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பலவாறு இருக்கும். ஒரு சிலர் இதனை ஆரோக்கியமானது என்கிறார்கள். ஒரு சிலர் அதற்கு புறம்பாகவும் பேசுவர். பலருக்கு பால் அலர்ஜியையும் உண்டாக்கும். ஆனால், டீயில் இருந்து பாலை நீக்கிவிட்டும் நாம் ஆரோக்கியமாக குடிக்கலாம்.
ஆயுர்வேத மருத்துவரான திக்ஷா பவ்சர் அவர்கள் இஞ்சி டீ குறித்த சில தகவலை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளது, ‘இந்த இஞ்சி டீ எண்ணற்ற நன்மைகளை கொண்டது. இதனை உங்களின் தினசரி உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம்.’ என்கிறார்.
ஆயுர்வேதத்தில் இஞ்சியின் பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதனில் தயாரிக்கப்படும் டீயும் சிறந்ததே என்கிறது ஆயுர்வேதம்.
டாக்டர் திக்ஷா ஆரோக்கியமான இஞ்சி டீ போடுவதையும் நம்முடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதனை உங்களுடைய அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்வதென்பதும் மிக எளிதே.
இந்த டீயை தயாரிப்பது எளிதான விஷயமே. ஆனால், டீ சூடாக இருக்கும்போது தேனை சேர்ப்பது பலனளிக்காது. ஆயுர்வேதத்தில், தேனை சூடுபடுத்த பரிந்துரைக்கப்படவில்லை. இது பலனளிக்காது, மாறாக தீங்கு விளைவிக்கும். இதனை அறை வெப்பநிலையில் குடிக்கலாம். ஆனால், வெதுவெதுப்பாக குடிப்பது சிறந்தது.
இஞ்சி நன்மை அளிக்கும் என்றாலும், உஷ்ணம் வாய்ந்தது. உங்களுக்கு இரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் குடிக்க வேண்டாம். அதேபோல உஷ்ணத்தால் அலர்ஜி உண்டாகும் எனில், நீங்களும் குடிக்க கூடாது. அதற்கு பதிலாக சோம்பு, சீரகம் மற்றும் தனியா விதைகளில் டீ போட்டு குடிக்கலாம். இவை குளிர்ந்த தன்மை உடையது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் ஏதாவது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கினாலோ அல்லது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தாலோ, மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: pexels, freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]