herzindagi
eat breakfast big

morning food: காலையில் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு கெடுதல் உள்ளதா!!!

health tips: காலையில் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுபவரா நீங்கள் ? இது உங்களுக்கு தான்.
Editorial
Updated:- 2022-12-06, 09:00 IST

பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. இதில் உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே, ஒவ்வொருவருமே தினமும் பழங்களை சாப்பிட வேண்டும். இருப்பினும், பழங்கள் சாப்பிடவும் ஒரு வரைமுறை உள்ளது. பழங்களைத் தவறான முறையில், தவறான சமயத்தில் சாப்பிட்டால், அப்போது பக்கவிளைவுகளே அதிகம், கிடைக்கும் பலன்கள் மிக குறைவே.

பழங்களை ஆரோக்கியமான ஒன்று என எல்லோரும் கருதுகிறோம். அதனாலேயே, வரைமுறை எதுவுமின்றி எல்லா நேரத்திலும் சாப்பிடுகிறோம். சிலர், காலை உணவை சாப்பிட விரும்புவதில்லை. பழங்களை மட்டுமே காலையில் சாப்பிடுவார்கள். ஒருவேளை காலை உணவைத் தவிர்த்து, வெறும் பழங்களை மட்டுமே நீங்கள் சாப்பிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். எனவே இன்றைய பதிவில், பழங்களை மட்டுமே காலை உணவாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை படித்தறிவோம் வாருங்கள்.

இரத்த சர்க்கரை அளவு குறைந்து பிரச்சனையை உண்டாக்கும்

eat breakfast

உடல் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகச் செயல்பட காலை உணவு அவசியமானது. இரவு தூங்கி எழுந்து 7 முதல் 8 மணி நேரம் கழித்தே உங்கள் முதல் உணவை எடுத்துக்கொள்கிறீர்கள். ஆகையால் காலை உணவில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின் மற்றும் தாதுக்கள் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். காலை உணவில் இந்த சத்துக்கள் இல்லையெனில், அந்நாளின் செயல்பாடுகளுக்குத் தேவையான உடல் ஆற்றலை உங்களால் பெற முடியாது. தினமும் காலையில் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவதால், உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையும். உங்களுடைய உடல், கார்போஹைட்ரேட்டிலிருந்து குளுக்கோஸை பெற முடியாமல் போகலாம்.

உடல் எடை அதிகரிக்கலாம்

eat breakfast

பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்க, பழங்களைச் சாப்பிடுகிறார்கள். ஆனால், பழங்களை மட்டுமே காலை உணவாக சாப்பிடும்போது உங்கள் எடை அதிகரிக்கும். மேலும், இவை எளிதில் செரிமானம் அடைய கூடியவை என்பதால், மீண்டும் பசி எடுக்கும். இது போன்ற சூழலில் ஒருவர், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடுவார். இதனால், தேவையற்ற கொழுப்பு உடலில் தங்கிவிடும்.

மலச்சிக்கல் பிரச்சனை வரலாம்

பழங்களில் மிகுதியாக உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. எனினும், வெறும் பழங்களை மட்டுமே காலையில் சாப்பிடும்போது, அது மலச்சிக்கலை உண்டாக்கும். அளவுக்கு அதிகமான நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்முறையில் குறுக்கிடுகிறது. இது கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புசத்து ஆகியவற்றோடு திரண்டு செரிமானத்தை தாமதமாக்குகிறது.ஆகையால், பழங்களை மட்டுமே சார்ந்திருக்கும்போது உங்கள் உடல் செயல்பாடு பெருமளவில் பாதிக்கப்படும்.

மந்தமாக உணர்தல்

காலையில் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவது, உங்களுடைய ஆற்றல் மட்டத்தைப் பாதிக்கும். நீங்கள் சாப்பிடும் காலை உணவு தான், அன்றைய நாளுக்கான முழு ஆற்றலையும் உங்களுக்கு வழங்குகிறது. ஆனால், வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடும்போது வளர்சிதை மாற்ற செயல்முறை மிக மெதுவாக நடக்கிறது.

உடல்நல பிரச்சனைகள் உண்டாகலாம்

eat breakfast

காலையில் வானிலை குளிராகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். பழங்கள் குளிர்ச்சியானவை. இது போன்ற சூழலில், வெறும் பழங்களை மட்டுமே காலை உணவாக சாப்பிடும்போது, உங்களுடைய உடல் சமநிலை அற்று போகிறது. இதன் காரணமாகவே, நீங்கள் பல வித உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.

எனவே, இன்று முதல் காலைவேளையில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அதற்கு பதிலாக எல்லா ஊட்டச்சத்துக்களையும் கொண்ட சிறந்த காலை உணவை சாப்பிட தொடங்குங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]