Brinjal Side Effects : கத்திரிக்காயை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

உடலில் இந்த வகையான பிரச்சனைகளை கொண்டவர்கள் மட்டும் கத்திரிக்காயை சாப்பிட கூடாது என எச்சரிக்கப்படுகிறது. என்ன காரணம்? வாருங்கள் விரிவாக பார்ப்போம். இனி கத்திரிக்காய் சாப்பிடும் போது சற்று கவனமாக இருங்கள். 

 
brinjal foods tamil

குழம்பு, தொக்கு, வறுவல், பொரியல் என கத்திரிக்காயை எந்த வகையில் சமைத்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் உடலில் சில குறிப்பிட்ட பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றா கத்திரிக்காயில் இருக்கும் என்சைம்கள் சில நேரங்களில் தோல் தொடங்கி பல்வேறு பிரச்சனைகளைம் உடலில் ஏற்படுத்தக்கூடியவை.

அந்த வகையில் இந்த பதிவில் யாரெல்லாம் கத்திரிக்காய் சாப்பிட கூடாது என்பதை விரிவாக பார்ப்போம்.

அலர்ஜி

அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும். அலர்ஜி இருக்கும் போது கத்தரிக்காயை சாப்பிட்டால் பிரச்சனை இன்னும் அதிகமாகும்.

கண்களில் பிரச்சனை

கண் எரிச்சல் மற்றும் கண்களில் தொற்று பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிட வேண்டாம். இது பிரச்சனையை இன்னும் அதிகமாக்கும்.

பைல்ஸ்

பைல்ஸ் நோயால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் கத்திரிக்காய் இந்த பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தலாம். .

பித்தப்பையில் ஸ்டோன்

கத்திரிக்காயில் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் பித்தப்பையில் ஸ்டோன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது.

birnjal food

ரத்த சோகை

ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காயை உட்கொள்ள வேண்டாம், ஏனெனில் அதன் நுகர்வு பண்பு ரத்த உருவாகத்திற்கு இடையூறாக உள்ளது.

அதிகப்படியான மருந்து

மன அழுத்தத்தைப் போக்க மருந்து மற்றும் மாத்திரைகள் எடுத்து கொள்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உடலில் மருந்தை செயல்பட விடாமல் தடுக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காயை உட்கொள்ளக்கூடாது. இந்த நேரத்தில் கத்தரிக்காயை உட்கொள்வது வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:வாந்தி வருவது போன்ற உணர்வை சரிசெய்ய என்ன செய்வது?

நீங்களும் இதுப்போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால் உணவில் கத்திரிக்காய் சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP