Daily Bath : தினமும் குளிப்பதால் உடலில் இவ்வளவு நல்லது நடக்கிறதா!

தினமும் குளிப்பது நாள் முழுவதும் புத்துணர்ச்சியை  தருவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. வாருங்கள், தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.  

 

bathing benefits

சிலர் குளிர்காலத்தில் குளிருக்கு பயந்து தினமும் குளிப்பதை குறைத்து கொள்கிறார்கள். தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தான் இந்த தவறை செய்வார்கள். தினமும் குளிப்பது நாள் முழுவதும் புத்துணர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. வாருங்கள், தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

நன்மைகள்

  • குளிர்ந்த நீரில் குளிப்பது சருமத்தை இறுக்கமாக்கும். முகத்தில் ஏற்படும் வியர்வை மற்றும் திறந்த சரும துளைகளை குறைக்கவும் குளிர்ந்த நீர் உதவுகிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தினமும் நீரில் குளிப்பது அவசியம்.
  • குளிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. தினசரி குளியல் இதயத்தின் செயல்முறைகளை மேம்படுத்துகிறது. மேலும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
  • தினமும் குளிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு ஒருவிதமான பயிற்சியை தந்து உடலில் ஏற்படும் தசை மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது.
  • தலைக்கு குளிக்காமல் இருப்பது முடியில் எண்ணெய் பசையை உண்டாக்கும். இதனால் பொடுகு மற்றும் பேன் வரவும் வாய்ப்புண்டு. எனவே, தினமும் தலைக்கு குளிக்க முயற்சி செய்யுங்கள். முடியும் வலுவடையும்.

பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

தினமும் குளிப்பது முகப்பரு மற்றும் முகப்பரு கட்டி போன்ற பிரச்சனைகளை விரட்டும். இதனால் முகத்தில் அழுக்குகள் சேராது, பாக்டீரியா தொற்றும் பரவாது.

daily bathing

மன அழுத்தத்தை குறைக்கும்

தினமும் குளிப்பது உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இது மன அழுத்தத்தை குறைப்பதுடன் மனதிற்கு அமைதியையும் தருகிறது.

சுவாச மண்டலத்தை மேம்படுத்தும்

தினமும் குளிப்பது நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இதனால் ஆக்ஸிஜனை உறிஞ்சும் திறன் அதிகமாகும். சுவாச மண்டலமும் மேம்படும்..

குளிர்காலத்தில் நீங்கள் தினமும் குளிப்பதை தவிர்த்தால் இந்த நன்மைகளை பெற முடியாது. எனவே தினமும் குளிப்பதை பழகப்படுத்தி கொண்டு. உடலை ஆரோக்கியமாக. வைத்து கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:மாதவிடாய் வலியை குறைக்க உதவும் உணவுகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP