Period Pain Relief : மாதவிடாய் வலியை குறைக்க உதவும் உணவுகள்

மாதவிடாய் வலியை குறைக்க உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கடுமையான வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த உணவுகளை எடுத்து கொண்டால் மாதவிடாய் வலி குறையும். 

periods pain food

பெண்கள் மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுவது பொதுவான ஒன்று. மாதத்தில் 3 நாட்கள் இந்த பிரச்சனையால் அவதிப்படுவது வழக்கமாக இருந்தாலும், சில பெண்களுக்கு கடுமையான வலி ஏற்படுகிறது. வாந்தி, மயக்கம், தலைவலி, இடுப்பு வலி என இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பாக பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த நேரத்தில் பெண்கள் எடுத்து கொள்ளும் உணவு மிக மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக சில உணவுகள் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகின்றன. அதுக் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சால்மன் மீன்

கொழுப்பு நிறைந்த மீன் மாதவிடாய் வலியை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. சால்மன் மீன்களில் ஒமேகா-3 எனப்படும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஒமேகா-3கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இவை வலி நிவாரணத்திற்கு நல்லது. புரதத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் சால்மன் வைட்டமின்கள் D மற்றும் B6 இன் சிறந்த மூலமாகும்.

கீரைகள்

இரும்பு சது நிறைந்த கீரைகளை இந்த நேரத்தில் எடுத்து கொள்வது மிக மிக நல்லது. இந்த நேரத்தில் இரத்த போக்கு அதிகமாக இருக்கும் என்பதால் பெண்கள் கீரைகளை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

பழங்கள்

வாழைப்பழங்கள், அன்னாசிப்பழம் மற்றும் கிவி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். வாழைப்பழ ஸ்மூத்தி எனர்ஜி தரும். இதில் வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழங்களில் வைட்டமின் பி6 மற்றும் ஆரோக்கியமான அளவு பொட்டாசியம் உள்ளது.

periods foods

சீஸ்

இதில் கால்சியம் நிறைந்துள்ளது. பி.எம்.எஸ் அறிகுறிகளான மனநிலை மற்றும் சோர்வு போன்றவற்றையும் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஓட்ஸ்

சத்து நிறைந்த ஓட்ஸை காலை உணவாக எடுத்து கொள்ளலாம். இதில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியத்தின் சத்துக்கள் உள்ளன. ஓட்ஸில் பலவகைகள் உள்ளன. ஆரோக்கியம் நிறைந்த புரதச்சத்து ஓட்ஸை எடுத்து கொள்வது நல்லது.

foods on periods

முட்டைகள்

முட்டையில் உள்ள வைட்டமின்கள் சிறந்த வலி நிவாரணகளாக உள்ளன. முட்டையில் வைட்டமின்கள் B6, D மற்றும் E உள்ளன. இவை அனைத்தும் இணைந்து PMS இன் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP