Weight Loss Foods : உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

 உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள், டயட்டில் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

weight loss tips

மரபியல் காரணங்கள், உடல் எடை, கொழுப்பு, மோசமான உணவுப் பழக்கங்கள், ஒழுங்கற்ற தூக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பது ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது . இதனால் பலரும் தற்போது உடல் எடையை குறைக்கும் டயட் முறைகளை பின்பற்ற தொடங்குகின்றனர். டயட்டுடன் உடற்பயிற்சிகளையும் அவர்கள் பின்பற்றுக்கின்றனர்.

முழுமையாக உடல் எடையை குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. குறிப்பிட்ட சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் யட்டில் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஜாம்

பெரும்பாலும் காலை உணவில் நாம் ரொட்டியுடன் ஜாம் சாப்பிட விரும்புகிறோம். ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் சமையலறையில் இருந்து ஜாமை விலக்க வேண்டும். ஜாமில் செயற்கை சுவை மற்றும் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, சுவையூட்டப்பட்ட சர்க்கரையை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவாது. உங்கள் சமையலறையில் இருந்து முதலில் ஜாமை எடுத்து விடுங்கள்.

food jam

கூல் ட்ரிங்க்ஸ்

சமையலறையில் கூல் ட்ரிங்க்ஸ் எனப்படும் குளிர்பான பாட்டிலை வைக்க வேண்டாம். தாகத்திற்கு எதாவது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது, சமையலறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ஃபிஸி பானங்களை எடுத்து அருந்துவோம். ஆனால் அத்தகைய பானங்கள் உங்கள் எடையை மேலும் அதிகரிக்கும். குளிர்பானங்கள் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்பையும் ஏற்படுத்துகின்றன. எனவே, நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், உங்கள் சமையலறையிலிருந்து ஃபிஸி பானங்களை முற்றிலும் விலக்க வேண்டும்.

வெள்ளை சர்க்கரை

நீங்கள் உடல் எடையை குறைக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் சமையலறையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரையை அகற்ற வேண்டும். வெள்ளை சர்க்கரை உங்கள் கலோரியின் அளவை அதிகரிக்கிறது, இதனால் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக தேன், தேங்காய் சர்க்கரை மற்றும் பேரிச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்வது நல்லது.

biscuit food

பிஸ்கட்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை மைதா மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எனவே, டயட்டில் இருப்பவர்கள் நிச்சயம் பிஸ்கட் சாப்பிடுவதை நிறுத்தவும்.

இந்த பதிவும் உதவலாம்:ஜோடியாக உடல் எடையை குறைக்க டிப்ஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP