Cauliflower for Weight Loss : காலிபிளவரை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முடியுமா?

காலிபிளவரை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முடியும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?  இந்த பதிவில் அதுக் குறித்து விரிவாக பார்க்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலிபிளவரை தாராளமாக உட்கொள்ளலாம். 

cauliflower for weightloss

காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிம் சாப்பிடும் காய்கறியாக உள்ளது. இதை வைத்து பலவகையான ரெசிப்பிகளை செய்யலாம். பக்கோடா தொடங்கி ஃப்ரை, ரோஸ்ட், கிரேவி என ஏகப்பட்ட ரெசிபிக்களை செய்யலாம். அதே போல் பலருக்கும் இருக்கும் சந்தேகம்காலிபிளவரை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? என்று நிச்சயம் இல்லை. காலிபிளவரை உடல் எடையை குறைக்கும் டயட்டிலும் சேர்த்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க காலிபிளவரை எப்படியெல்லாம் உட்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.காலிபிளவரை வைத்து சில குறிப்பிட்ட ரெசிப்பிக்களை செய்து சாப்பிட்டு உடல் எடையை குறைத்திடுங்கள்.

காலிபிளவர் சீஸி ரொட்டி

இதற்கு காலிபிளவரை வேக வைத்து எடுத்து கொண்டு அதை சீஸில் போட்டு வறுக்க வேண்டும். உடலுக்கு தேவையான முக்கியமான கொழுப்புகள் சீஸில் உள்ளன. பின்பு இந்த காலிபிளவரை சீஸை கோதுமை ரொட்டியில் வைத்து உட்கொள்ளவும். இதை காலை நேர உணவாக எடுத்து கொள்வது நல்லது.

காலிபிளவர் அல்பிரடோ சாஸ்

காலிபிளவரை வைத்து சாஸ் தயார் செய்து கொள்ளலாம். அதை பர்கர், சாண்ட்விட்ச், சாலட்டில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. அதற்கு வறுத்த பூண்டு, உப்பு சேர்த்து வைத்த காலிபிளவர், வேர்க்கடலை, சில்லி ப்ளேக்ஸ் இருந்தால் போதும். இவற்றை மிக்ஸியில் வைத்து நன்கு அடைத்து கொள்ளவும். பின்பு பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும். தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

cauliflower recipes

காலிபிளவர் செடார் பஜ்ஜி

பஜ்ஜி என்றவுடன் எண்ணெயில் பொரிப்பது என நினைக்காதீர்கள். காலிபிளவரை பொடியாக நறுக்கி அடனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து அதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும். பின்பு அதை ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் சாஸ் வைத்து சாப்பிடவும்.

காலிபிளவர் சூப்

உடல் எடையை குறைக்கும் டயட்டில் சூப் சேர்ப்பது மிகவும் நல்லது. காலிபிளவர் சூப் செய்வது மிகவும் சுலபம். காலிபிளவருடன் மற்ற காய்கறிகள், தேவைப்பட்டால் சிக்கனும் சேர்த்து நன்கு வேக விடவும். பின்பு அந்த நீரில் உப்பு, மிளகு தூள் சேர்த்து குடிக்கவும்.

எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த முறைகளில் காலிபிளவரை உட்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரைக்கு பின்பு எடுத்து கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க உதவும் தோசை வகைகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP