herzindagi
vomiting tips

Vomiting Sensation : வாந்தி வருவது போன்ற உணர்வை சரிசெய்ய என்ன செய்வது?

 வாந்தி வருவது போன்ற உணர்வை சரிசெய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். எதனால் வாந்தி ஏற்படுகிறது என்பதையும்  இங்கு அறிந்து கொள்ளுங்கள். இந்த குறிப்புகளை பின்பற்றி அதை சரிசெய்ய தொடங்குங்கள். 
Editorial
Updated:- 2023-04-16, 10:46 IST

பெண்களுக்கு அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது மிகவும் மோசமான பிரச்சனையாகும். கர்ப்பக்காலத்தில் இதுப்போன்ர பிரச்சனை ஏற்பருவது பொதுவான ஒன்று. ஆனால் மற்ற நாட்களில் கூட குமட்டக்ல், எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகியவை மிகவும் ஆபத்து தரகூடியவை.

எனவே, இந்த பதிவில் அதை சரிசெய்வது எப்படி? என்பதை விரிவாக பார்ப்போம். வாந்தி வருவது போன்ற உணர்வு ஏன் ஏற்படுகிறது? என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இரைப்பை குடல் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளால் இதுப்போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. குமட்டல் அல்லது வாந்தி வரவைக்கும் உணர்வுக்கும் இரைப்பை பிரச்சனைக்கும் அதிக தொடர்பு உள்ளது. இந்த பிரச்சனை பெண்களை அசவுகரியமாகவும் உணர வைக்கும். இதற்கு தனியாக பெரிய சிகிச்சை முறைகள் எதுவுமில்லை. சில விஷயங்களை முறையாக பின்பற்றி இதை சரிசெய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்:பாத வெடிப்பை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்

வாந்தி வருவது போன்ற உணர்வை சரிசெய்ய செய்ய வேண்டியவை

  • அதிக சூடான உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. மிதமான சூட்டில் இருக்கும் உணவுகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.
  • உணவு சாப்பிட்ட உடனே படுக்கக் கூடாது. உட்கார்ந்து கொண்டு கால்கள், நமது தலைக்கு மேல்புறம் இருக்குமாறு சில நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 - 6 டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை பிரித்து பிடித்து குடிக்க வேண்டும்.

vomiting problem

  • குளிர்பானங்களை எடுத்து கொள்ளலாம். இனிப்பையும் சேர்த்து கொள்வது குமட்டல் உணர்வை தடுக்கும்.
  • புதினாவை அதிகம் சேர்த்து கொள்வது நன்மை த்ரும். புதினாவுக்கு குமட்டலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது.
  • இதுத்தவிர்த்து உடற்பயிற்சி, யோகா, நேரம் தவறி உண்பதை கைவிடுவது போன்றவற்றை முறையாக கடைப்பிடித்தால் இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுதலை கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:தினமும் ஊறவைத்த பேரிச்சம் பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]