Soaked Dates: தினமும் ஊறவைத்த பேரிச்சம் பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் காலையில் ஊறவைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இப்படி தினமும் ஊற வைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்  என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

soaked dates daily

பேரிச்சம்பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் ஊறவைத்த பேரிச்சம்பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினமும் காலை உணவிலும் நீங்கள் பேரிச்சம் பழத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

நிபுணரின் கருத்து

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பவ்சர் தனது இன்ஸ்டாகிராமில் ஊறவைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விரிவாக பதிவு செய்துள்ளார். அதுப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

மலச்சிக்கல்

பேரிச்சம் பழம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஊறவைத்த பேரிச்சம்பழங்கள் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் சரியான அளவு நார்ச்சத்து இருப்பதால் இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சரும பராமரிப்பு

ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது என கருதப்படுகிறது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், கறை, அழுக்கு, மாசு போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

கொலஸ்ட்ரால்

ஊறவைத்த பேரீச்சம்பழத்தை தினமும் காலையில் உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடை சீராக பராமரிக்கப்பட்டு இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கிறது.

dates benefits for women

எலும்புகளுக்கு நல்லது

ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் கால்சியம், செலினியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன, இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டால் எலும்புகள் வலுவடையும்.

ரத்த சோகை

ஊற வைத்த பேரிச்சம்பழத்தில் சரியான அளவு இரும்புச்சத்து உள்ளது. ஊறவைத்த பேரிச்சம்பழத்தை உட்கொள்வது ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. சொல்லப்போனால் ரத்த சோகையை சரிசெய்யும் அருமருந்து பேரிச்சம் பழம் தான்.

உடல் எடை

உடல் எடையை அதிகரிக்கவும் பேரிச்சம் பழம் உதவுகிறது. நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்றால் உடல் எடையை அதிகரிக்க ஊறவைத்த பேரிச்சம்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய புரதங்கள் உள்ளன. இது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:வாந்தி வருவது போன்ற உணர்வை சரிசெய்ய என்ன செய்வது?

ஆரோக்கியமாக இருக்க ஊறவைத்த பேரிச்சம்பழத்தை நீங்களும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP