Cracked Heels Home Remedy : பாத வெடிப்பை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்

பாத வெடிப்புகளை சரிசெய்து  கால் பாதங்களை மென்மையாக்க சில வகையான வீட்டு வைத்தியங்கள் கைக்கொடுக்கின்றன. அதுக் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். அதிலும் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி இந்த பிரச்சனையை சரிசெய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

tips for soft heels

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு வருவது பொதுவான ஒன்று. இதை நினைத்து பெண்கள் அதிகம் கவலைக்கொள்கிறார்கள். இந்த பிரச்சனையை சரிசெய்து கால் பாதங்களை மென்மையாக்க சில வகையான வீட்டு வைத்தியங்கள் கைக்கொடுக்கின்றன. குறிப்பாக, குதிகால் வெடிப்பை சரிசெய்ய நெய் மிகவும் உதவுகிறது.

எனவே இந்த பதிவில் சமையல் பொருளான நெயை வைத்து பெண்களுக்கு ஏற்பரும் குதிகால் வெடிப்பு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

நெய் மற்றும் எண்ணெய்

நெய்யை சூடாக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் வேப்ப எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். காயங்களை சரிசெய்யும் பண்பு இந்த கலவையில் இருப்பதால் இதை தினமும் குதிகாலில் தடவி வரவும். விரைவில் வெடிப்பு சரியாகி பாதம் மென்மையாக மாறும்.

நெய் மற்றும் தேன் மெழுகு

இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அடுப்பில் சூடுப்படுத்தவும். பின்பு, கெட்டியான இந்த கலவையை இரவு நேரத்தில் குதிகாலில் தடவி சாக்ஸ் போட்டு கொள்ளவும். இதனால் வெடிப்பு மறைந்து பாதம் மென்மையாகும்.

நெய் மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை நெய்யுடன் சம அளவில் சேர்த்து சூடாக்கி, அது வெதுவெதுப்பாக இருக்கும் போதே குதிகாலில் தடவவும். இதனால் குதிகால் வெடிப்பு பிரச்சனை விரைவில் சரியாகும்.

homen cracked heels

தேன் மற்றும் நெய்

தேனுடன் நெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து சூடுபடுத்தவும். பின்பு இந்த கலவையை குதிகாலில் தடவவும். தேன் மற்றும் மஞ்சளில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல், கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குதிகால் வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

நெய் மற்றும் போரிக் அமிலம்

நெய் மற்றும் போரிக் அமிலத்தை ஒன்றாக சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடுப்படுத்தவும். பின்பு அந்த கலவையை குதிகாலில் தடவவும். இதனால் வெடிப்பு பிரச்சனை விரைவில் சரியாகும்.

நெய் மற்றும் வைட்டமின் E ஆயில்

குதிகால் வெடிப்புகளை சரிசெய்து பாதங்களை மென்மையாக்க, நெய் மற்றும் வைட்டமின் E ஆயிலை சூடுப்படுத்தி பாதங்களில் தடவவும். இது வெடிப்புகளை சரிசெய்து குதிகால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

சூடான நெய்

நீங்கள் வெறும் நெய்யை மட்டும் கூட வீட்டில் சூடுப்படுத்தி குதிகால் வெடிப்புகளில் தடவலாம். இது வெடிப்புகளைச் சரிசெய்வதுடன் குதிகால் வலியைக் குறைக்கவும் உதவும்.

நீங்களும் நீண்ட நாட்களாக குதிகால் வெடிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கவும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP