நம்மில் பெரும்பாலோர் வெண்டைக்காய் அல்லது லேடிஃபிங்கர் என்று அழைக்கப்படும் காயை உணவாக சாப்பிட விரும்புகிறோன். ஆனால் அதை ஊறவைத்த தண்ணீரை உட்கொள்வதை விரும்புவதில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எடை இழப்பு, தொண்டை புண் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு வெண்டைக்காய் நீர் சிறந்த பலன்களை தருகிறது. சருமத்தை பொலிவாக்குவதற்கும் பயனளிக்கிறது.
வெண்டைக்காயில் ஆல்பா-குளுக்கோசிடேஸ் என்சைம்கள் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் கரையாத நார்ச்சத்து கொண்ட பசை கூறுகள் நமது இரத்தத்தில் சர்க்கரையின் வெளியீட்டைத் தடுக்க உதவுகின்றன. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்ற நொதிகளைத் தடுப்பதால் இது ஒரு சரியான நீரிழிவு-எதிர்ப்பு பானமாகும். இந்த நொதிகள் செரிமான அமைப்பை மெதுவாக்குகிறது, எனவே சர்க்கரை உறிஞ்சும் செயல்முறையை தாமதப்படுத்துகிறது.
மேலும் படிக்க: 7 நாட்கள் தொடர்ந்து ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் இந்த அற்புத மாற்றத்தை உணர்வீர்கள்
வெண்டைக்காய் நீரில் இருக்கும் மெலிதான பொருள் பித்த அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலை சரிசெய்ய உதவுகிறது. உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வெண்டைகாய் தண்ணீரை கொண்டு கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம், மேலும் எடை குறைக்க நினைப்பர்கள் வெண்டக்காய் தண்ணீர் சிறந்தது. இருப்பினும் இதற்கு உங்கள் உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
வெண்டைக்காய் நீரில் பொட்டாசியம் இருப்பதால் மூளையின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. பொட்டாசியத்தின் பங்கு பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நமது எலும்புகளை வலுப்படுத்துவதைத் தடுக்கிறது.
வெண்டைக்காய் தண்ணீரில் மெலிதான பொருட்களில் கரையாத நார்ச்சத்து உள்ளதால் குடல் வழியாக சீரான இயக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது மலச்சிக்கலை எளிதாக்க உதவுகிறது.
வைட்டமின் சி நிறைந்த காய்கறி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சிறந்தது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இந்த மழைக்காலங்களில் முக்கியமானது.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கிருமிகளுக்கு எதிராக நம்மை பராமரிக்க ஒரு பாதுகாப்பு வலையத்தை உருவாக்கிறது.
மேலும் படிக்க: பெண்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பொக்கிஷமாக இருக்கும் பலாப்பழ நன்மைகள்
4-5 வெண்டைக்காயை 2 ஆக வெட்டி குடிக்கும் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும், பின் காலையில் துண்டுகளை அகற்றி வெறும் தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]