herzindagi
image

மலச்சிக்கல் பிரச்சனையால் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா? பெற்றோர்கள் செய்ய வேண்டியது இது தான்

சரியான உணவுப்பழக்கம் இல்லாதது முதல் முறையாக மலம் கழிக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் 60 முதல் 70 சதவீத குழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.  
Editorial
Updated:- 2025-08-11, 21:01 IST

ஒரு வயதுள்ள குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் முதலில் உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக நார்ச்சத்துள்ள உணவுகள் முதல் திரவ உணவுகளை அதிகளவில்  சாப்பிடக் கொடுப்பது நல்லது. இவறைத் தவிர்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது?

சரியான உணவுப் பழக்கம் இல்லாமல் இருப்பது, முறையாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது, குழந்தைகளுக்கு மலம் கழிக்கப்படுத்தப்படாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக அக்குவேட் மலச்சிக்கல் (acute constipation) மற்றும் க்ரோனிங் மலச்சிக்கல்(chronic constipation) எனக்கூடிய மலச்சிக்கல் பிரச்சனை 4 வாரம் முதல் அதற்கு மேல் தொடரக்கூடும். இப்பிரச்சனை உள்ளவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறைத் தான் மலம் கழிப்பார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் கொண்டு வருவது மட்டுமின்றி முறையான மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

மலச்சிக்கலைத் தவிர்க்க செய்ய வேண்டியது:

நார்ச்சத்துள்ள உணவுகள்

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டாயம் குழந்தைகளுக்கு நார்ச்சத்துள்ள பழங்களான ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு, மாம்பழம் போன்றவற்றை அடிக்கடி உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதே போன்று கேரட், பட்டாணி, பீன்ஸ், கீரை வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க: குளிர்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்க; இந்த 5 விஷயங்களை ட்ரை பண்ணுங்க

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதோடு நார்ச்சத்துக்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஸ்மூத்திகள் அல்லது ஜுஸ்கள் செய்து சாப்பிடுவது நல்லது.

 

 

குழந்தைகளாக இருந்தாலும் பருவநிலைக்கு ஏற்ப தண்ணீர் அருந்தக் கொடுக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது உடலின் செரிமான அமைப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

மலச்சிக்கலைத் தீர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது:

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும் என்றால் மேற்கூறிய படி உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதைப் பின்பற்றியும் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகவில்லையென்றால் முறையான மருத்துவ ஆலோசனை தேவை.

மேலும் படிக்க:  பெற்றோர்களாக குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது இவை தான்!

 

மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்பதோடு potty training எனக்கூடிய சரியான முறையில் மலம் கழிக்கும் பயிற்சியைக் கட்டாயம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும். வெஸ்டர்ன் கழிப்பறையைத் தவிர்க்க இந்தியன் கழிப்பறைப் பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். இதோடு தினமும் காலை மற்றும் இரண்டு வேளைகளில் கட்டாயம் மலம் கழிக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]