குழந்தைகள் எப்போதுமே ஒவ்வொரு வீட்டிலும் உலா வரக்கூடிய சந்தோஷம். என்ன தான் அவர்கள் சேட்டைகள் செய்தாலும், அடம்பிடித்தாலும் அந்த நேரத்தில் மட்டும் தான் சளிப்பும்,கோபமும் வரக்கூடும். அந்த நேரத்தில் நம்முடைய குழந்தைகள் கொஞ்சம் புன்னகை செய்தால் போதும் வந்த கோபம் கூட அப்படியே ஒடிவிடும். இத்தகைய செயல்கள் தான் குழந்தைகளின் தனித்துவம். இப்படி வீட்டில் உள்ள அனைவருக்கும் தனித்துவமாக இருக்கும் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சவாலான செயல். இருந்தப்போதும் குழந்தைகளைப் பொறுப்புடனும், நல்ல பண்புகளுடன் வளர்ப்பது என்பது பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. இதோ அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.
குழந்தைகள் என்றாலே சேட்டைகளும்,தெரியாமல் செய்யக்கூடிய தவறுகளும் சகஜம் தான். இதற்காக அவர்களுக்கு சிறிய தண்டனை கொடுக்கலாம். மாறாக ஏன் இப்படி செய்தாய்? என்று அவர்களை டார்ச்சர் செய்யக்கூடாது. அதற்கு மாற்றாக சேட்டைகள் செய்தால் என்ன நடக்கும்? ஏன் இதை செய்யக்கூடாது? என்பது பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதை விட்டு விட்டு டார்ச்சர் செய்தால் அவர்களின் மனநிலை மிகவும் பாதிக்கப்படும்.
அடுத்தப்படியாக குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்க பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தெரியாத விஷயங்கள் என்று ஒன்றுமில்லை. எனவே அதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்யவும். குழந்தைகளுக்கு 7 அல்லது 8 வயதாகிவிட்டால் அவர்களுக்கு ஏதாவது ஒரு டாஸ்க் அதாவது ஒரு வேலை செய்ய சொல்லிக் கொடுக்கவும். அவர்களால் முடியவில்லையென்றாலும் எப்படியாது முடிக்கும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு அந்த வேலைப் பிடித்திருந்தால் தொடர்ச்சியாக செய்ய சொல்லவும். இல்லையென்றால் பணியை செய்து முடிக்கும் வரை காத்திருந்து அதற்குப் பின்னதாக வேண்டாம் என்று கூறவும்.
குழந்தைகளிடம் எந்தளவிற்கு பிரியம் காட்டுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிய வைக்க வேண்டும். குழந்தைகள் கோபம் கொண்டாலும், சேட்டைகள் செய்தாலும் அந்த சமயத்திலும் அவர்களுக்கு பாசம் அதிகளவில் காட்ட வேண்டும். மேலும் எது நல்லது? எது கெட்டது? என்று குழந்தைகளுக்கு பாசத்தின் வாயிலாக கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். சில நேரங்களில் நம்முடைய குழந்தைகள் சண்டையிட்டு பெற்றோர்களை எதிர்த்து பேசுவார்கள். குழந்தை உனக்கு தெரியும். என்று திட்டுவதற்குப் பதிலாக அவர்களுக்கு என்ன மனதில் உள்ளது என்பதைக் கேட்டறிவும். மேலும் எதிர்த்து பேசினால் சண்டையிடக்கூடாது. ஏன் எதிர்த்து பேசினீர்கள்? எதற்காக கோப்படுகிறீர்கள்? என்பதை கேட்டறிய வேண்டும்.
பெற்றோர்கள் என்பவர்கள் குழந்தைகளை உலகிற்குக் கொண்டு வரக்கூடிய ஒரு கருவி மட்டும் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு நாங்கள் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் எனவும் நினைத்தை மட்டும் செய்ய வேண்டும் என்பதை சொல்லாதீர்கள். இப்படி தொடர்ச்சியாக சொல்லும் போது குழந்தைகள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிடித்த விஷயங்களைத் தெரியாமல் செய்ய முயற்சிப்பார்கள். இது தவறான நடைமுறைக்கு வழிவகுக்கும். எனவே இதை கட்டாயம் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]