பணியிடத்தில் மன அழுத்தமா? அப்ப இந்த விஷயங்களை செய்ய மறந்திடாதீங்க

நேரமின்மை, பணியில் முறையாக மேற்கொள்ள முடியாதது, வேலை பாதுகாப்பின்மை போன்ற பல காரணங்களால் அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் சில வழிமுறைப் பின்பற்ற வேண்டும்.
image

இன்றைய பொருளாதார சூழலில் கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்குச் சென்றால் மட்டுமே ஓரளவிற்கு குடும்பத்தை வழிநடத்த முடியும். இல்லையென்றால் பொருளாதார நெருக்கடியைக் கட்டாயம் சந்திக்க நேரிடும். இந்நிலையில் பணிக்குச் சென்றாலும் அங்குள்ள சூழ்நிலை பணியாளர்களை பதற்றத்துடனும், மன அழுத்தத்துடனும் வைத்திருக்கிறது. இவற்றை எப்படி சரி செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம்.

பணியிடத்தில் மன அழுத்தம்:

அரசு அலுவலகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடை போன்ற வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது பொதுவான விஷயமாக மாறிவிட்டது. பணியிடத்திற்கு ஏற்ப அவர்களின் மன அழுத்தம் வேறுபடுகிறது.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான டிப்ஸ்கள்:

பணிபுரியும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக உள்ளது நேரத்தை முறையாக நிர்வகிக்க தெரியாதது தான். எந்த நேரத்தில் எந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் அவசியம் வேண்டும். இதோடு தாமதாக பணிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்தில் பணிக்குச் சென்றாலே அன்றைய நாள் முழுவதும் எவ்வித சிக்கல்கள் இன்றி வேலை மேற்கொள்ளலாம்.
.
அடுத்தப்படியாக மன அழுத்தத்தைக் குறைக்க பணிக்கு இடையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக நேரம் நின்று கொண்டோ? அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து பணி மேற்கொண்டாலே உடல் சோர்வு அடையும். இதோடு ஏன் பணியில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படும். நாளடைவில் அதுவே மன அழுத்தம் ஏற்பட ஒரு காரணமாக அமைந்துவிடும். எனவே பணிகளுக்கு இடையில் கட்டாயம் ஓய்வு அவசியம் வேண்டும்.

பணிக்குச் செல்லும் முன்னதாக நன்கு சாப்பிட வேண்டும். பசி இருக்கும் நேரத்தில் தொடர்ச்சியாக பணியை மேற்கொண்டாலும் மன அழுத்தம் ஏற்படும். எனவே சிறு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவு முறை மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மேலும் படிக்க:கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்

வேலையில் இருக்கும் பணியாளர்கள் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், தலை மற்றும் காது பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக காதின் கீழ் பகுதி மற்றும் காதின் ஓரமாக கைகளை வைத்து மசாஜ் செய்யும் போது நரம்பு மண்டலம் சீராக செயல்படும். இது மன அழுத்தத்தைக் குறைக்கப் பேருதவியாக உள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP