உணவின் சுவையை அதிகரிப்பதில் அடிப்படைப் பொருளான உப்பு நமது அன்றாட சமையலில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, அதிகப்படியான உப்பை உட்கொள்வது கடுமையான உடல்நல விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் உப்பை அதிகமாக உட்கொள்வது இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்துடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சி அறிக்கைகள் அதிகப்படியான உப்பு நுகர்வுக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இது இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
உணவில் உப்பின் அதிகப்படியான பயன்பாடு டைப் 2 நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு காரணியாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிகப்படியான உப்பு உட்கொள்வது குறுகிய கால வீக்கத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில் உப்பு உடலில் தண்ணீரைத் தக்கவைத்து வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதிக உப்பு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில் பங்கு வகிக்கிறது.
உப்பை அதிகமாக உட்கொள்வதால் உடலில்தண்ணீர் தேங்கி கை, கால் மற்றும் முகம் வீக்கமடையும்.
மேலும் படிங்க கண் பார்வையில் பிரச்சினையா ? சில எளிய தீர்வுகள்
அதிகப்படியான சோடியம் அளவுகளால் சீர்குலைந்த எலக்ட்ரோலைட்கள் உடலை சமநிலைப்படுத்த முயற்சிக்கும் போது அதிகரித்த தாக உணர்வை வெளிப்படுத்தும். இது நீங்கள் அதிக உப்பு உட்கொண்டதை குறிக்கிறது.
Excessive salt intake is linked to a huge number of deaths, more than any other food.
— World Health Organization (WHO) (@WHO) January 14, 2024
Eat less salt 🧂 to reduce your risk of heart disease and death 👉https://t.co/yIHqCqhru2pic.twitter.com/XaN5cF17SH
அதிக உப்பு உட்கொள்வதால் உடலில் அதிகப்படியான நீர் தேங்கி காலப்போக்கில் குறிப்பிடத்தக்க எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான உப்பு நுகர்வு இரவில் தூக்க முறைகளை சீர்குலைப்பதோடு இணைக்கப்படுகிறது
அதிகப்படியான உப்பு குமட்டல் அல்லது அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிக உப்பு உட்கொள்வது இருதய நோய்கள், எலும்புகள் பலவீனமடைதல், சிறுநீரக கற்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்துடன் தொடர்புடையது.
மேலும் படிங்க குறட்டை பிரச்சினையை சரிசெய்ய இதை செய்யுங்க
அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தடுக்க நமது உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. எனவே ஒரு நபர் தினமும் எத்தனை கிராம் உப்பு உட்கொள்ள வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு இளம் வயதினர் ஐந்து கிராமிற்கும் குறைவாக சமையலில் உப்பு பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சராசரியாக மனிதர்கள் தினமும் பத்து கிராமிற்கும் அதாவது பரிந்துரைக்கப்படும் அளவை விட இரண்டு மடங்கு அளவு அதிக உப்பு உட்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]