நமது கண்களைப் பராமரிக்க சீரான உணவு பழக்கமும், குறிப்பிட்ட சில பயிற்சிகளும் அவசியமாகும். இதைவிட வருடத்திற்கு இரண்டு முறை கண் பரிசோதனைகள் செய்வது பாதிப்புகளைக் கண்டறிய உதவும்.
வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, துத்தநாகம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகளை கண் ஆரோக்கியத்திற்காக சாப்பிட வேண்டும். கேரட், கீரை, சிட்ரஸ் பழங்கள், மற்றும் மீன் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
மீன்களின் குடல் மற்றும் உடல் திசுக்களில் ஒமேகா 3 இருக்கும். மீன் சாப்பிடுவதால் கண்கள் வறட்சியடையாது. அதனால் மீன் கண்ணுக்கு மிகவும் நல்லது.
ஒமேகா-3 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான ஆதாரமாக அறியப்படும் சியா, ஆளி மற்றும் சணல் விதைகளை சாப்பிட வேண்டும்
லுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பச்சைக் இலைக் காய்கறிகள் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கீரை வகைகளை உணவில் சேர்க்கவும்
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும் நிறைந்துள்ளன. இது உங்கள் பார்வைக்கு உதவுகிறது.
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் சி உள்ளது. இவை உங்களுடைய வயது தொடர்பான கண் பிரச்சினைகளுக்கு உதவும்.
கண் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சரியான நீரேற்றம் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலில் நீரிழப்பை தடுக்கவும்.
கண் தசைகளை வலுப்படுத்தவும், கவனத்தை மேம்படுத்தவும் கண் பயிற்சிகளைச் செய்யவும். சிமிட்டுதல் மற்றும் கண் சுழற்சி போன்ற நுட்பங்கள் இதற்கு உதவியாக இருக்கும்.
நீண்ட நேரம் டிஜிட்டல் திரைகளை பார்த்து கொண்டே இருந்தால் கண்கள் சிரமப்படும். இதற்கு 20-20-20 விதியைப் பின்பற்றவும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றை குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்குப் பார்த்து கண் அழுத்தத்தைக் குறைக்கவும்
மேலும் படிங்க கண்களை பாதுகாக்க உதவும் 20-20-20 விதி
படிக்கும் போது அல்லது வேலை செய்யும் போது சரியான வெளிச்சத்தை உறுதி செய்யவும். கடுமையான, கண்ணை கூசும் விளக்குகள் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.
உங்கள் கண்களைப் பாதுகாக்க வெளியில் இருக்கும்போது uv பாதுகாப்பை வழங்கும் சன்கிளாஸ்களை அணியுங்கள்.
மேலும் படிங்க சூரிய ஒளியில் நில்லுங்க… ஆரோக்கிய பலன்களை பெறுங்க
கண்ணில் ஏதேனும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே அதனைக் கண்டறிந்து தீர்வு காணுவதற்கான பரிசோதனைகளைத் திட்டமிடுங்கள்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]