நீரேற்றம் முக்கியம்
வெயில்காலத்தை விட குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாகக் குடிப்பது இயல்பானதே. வெயில்காலத்தை போல குளிர்காத்தில் அதிகளவு தண்ணீர் தாகம் எடுக்காது. எனினும் குளிர்காலத்தில் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் கண்களில் உள்ள ஈரப்பதத்தின் அளவு நேரடியாகப் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யுங்கள் இல்லையெனில் திரவ உட்கொள்ளலை அதிகரிக்க மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம்.
கண்களை ஈரப்படுத்தும் வழி
- ஒரு கிண்ணத்தில் சூடான நீர் எடுத்துக் கொண்டு அதில் தூய்மையான துணியை ஊற வைக்கவும்.
- சிறிது நேரம் கழித்து அந்த துணியை வெளியே எடுத்து கண்கள் மூடிய நிலையில் அதன் மேல் 5-10 நிமிடங்களுக்கு வைக்கவும்.
ஈரப்பதமூட்டியின் பயன்பாடு
குளிர்காலத்தில் ரூம் ஹீட்டர்களை பயன்படுத்தினால் அதுவும் கண்கள் வறண்டு போக காரணமாகிவிடும். அதனால் ஹுமிடிஃபையர் எனும் ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள். இவை காற்றில் ஈரப்பதத்தை சேர்த்து கண்களுக்கு இதமான சூழலை அளிக்கும். குளிர்காலம் முடியும் வரை ஈரப்பதமூட்டியை உங்களது படுக்கை அறையிலோ அல்லது அதிக நேரம் அமரும் இடத்திலோ வைக்கலாம்.
மேலும் படிங்ககுளிர்காலத்தில் முடி உதிர்வு பிரச்சினையா? கவலை வேண்டாம்
ஊட்டச்சத்து நிறைந்த உணவு
கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு மிகவும் அவசியம். ஆகையால் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, ஜிங்க் மற்றும் செலினியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடவும். இந்த ஊட்டச்சத்துகள் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண்ணீரை உற்பத்தி செய்வதற்கும், கண்ணீர் படலத்தைப் பராமரிப்பதற்கும் உதவுகின்றன. இதனால் கண்கள் வறண்டு போகும் அபாயம் குறைகிறது. இதற்கு நீங்கள் மீன் எண்ணெய் மற்றும் ஆளி எண்ணெய் பயன்படுத்தலாம்.
கண்களைத் தேய்க்க கூடாது
இந்தக் குளிர்காலத்தில் உங்கள் கண்கள் தேய்ப்பதை தவிர்த்து விடுங்கள். கண்களைத் தேய்க்கும் போதும் கைகளில் இருக்கும் கிருமிகள் பரவி சிக்கலை ஏற்படுத்தும். இது கண் தொற்றுக்கு கூட வழிவகுக்கும்.
மேலும் படிங்கசரியா தூங்கலைன்னா நீரிழிவு நோய் ஏற்படும்
20-20-20 விதி
உங்கள் கண்கள் ஓய்வெடுக்கவும், மறுநீரேற்றம் செய்யவும் 20-20-20 விதியைப் பின்பற்றுங்கள். கண்கள் வறண்டு போவதை தடுக்க இது ஒரு எளிய வழியாகும். நீண்ட நேரம் டிவி அல்லது கணினி பார்த்துக் கொண்டிருந்தால் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கவனத்தை திருப்பி அடுத்த 20 விநாடிகளுக்கு 20 அடி தூரத்தில் வேறு எங்கையாவது பார்க்கவும்.
அடிக்கடி சிமிட்டவும்
கண்கள் வறண்டு போவதை தடுக்க மற்றொரு சுலபமான வழி கண்களை அடிக்கடி சிமிட்டுவதே. இதனால் கண்களின் மேற்பரப்பில் கண்ணீர் எளிதாக விநியோகிக்கப்படும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation