நீண்ட நாட்களாக பலரது மனதில் இருக்கும் கேள்விக்கு விடை காண வேண்டிய நேரமிது. நம்மில் பல பேர் உடல் சூட்டை தணிக்க வாரம் ஒருமுறை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிப்போம். சிலர் தினமும் கூட தலைக்கு குளிப்பார்கள். தலைக்கு குளிக்க போர்வெல் தண்ணீர், கிணற்று தண்ணீர், ஆற்று நீர் அல்லது மாநகராட்சி இணைப்பில் வரும் தண்ணீரில் பயன்படுத்துகிறோம். திடீரென முடி கொட்ட ஆரம்பித்தால் பயன்படுத்தும் தண்ணீரில் உப்பு அதிகமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழும். ஊரில் இருந்து சென்னை வந்த நண்பர்கள் சிலர் தங்களுக்கு முடி கொட்ட் ஆரம்பித்தால் ஊரில் இருந்தவரை கிணற்று தண்ணீர், ஆற்று நீரில் குளித்து முடி பளபளப்பாக இருந்தது. ஆனால் சென்னை வந்த பிறகு உப்பு தண்ணீரில் குளித்து முடியை இழந்துவிட்டதாக கூறுவார்கள். நாமும் சிலரை பார்த்திருப்போம் ஊரில் இருந்து வந்த போது முடி அடர்த்தியாக இருந்திருக்கும். ஆனால் மூன்றே மாதங்களில் முடி மொத்தமும் உதிர்ந்து வழுக்கையாகி இருக்கும்.
உப்பு தண்ணீரில் குளித்தால் உங்களுக்கு முடி கொட்டுமா என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். உப்பு தண்ணீரில் குளிப்பதால் தலையில் உப்பு படிந்து முடி உதிர்வதாக சிலர் கூறுகின்றனர். இதில் நாம் அடிப்படையக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வேரில் இருந்து முடி உதிர்வது தான் உண்மையான முடி உதிர்தல் ஆகும். வழக்கமாக ஒரு மனிதனுக்கு சராசரியாக 100 முடி கொட்டுவது இயல்பானது.
ஆண்களுக்கு வழுக்கை விழுந்தால் அது ஹார்மோன் குறைபாடாக இருக்கும். சிலருக்கு பூஞ்சை தொற்றினால் ஆங்காங்கே செதில்கள் உண்டாகி முடி கொட்டும். சத்து குறைபாடு, வயது அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் முடி உதிரும்.
உச்சந்தலையில் குறிப்பிட்ட அளவிற்குள் முடியின் வேர் இருக்கும். உப்பு தண்ணீரில் அதனுள் சென்று வேரில் ஊடுவி முடி உதிர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவே. போர்வெல் தண்ணீர் கடினமான நீர் என்றும் ஆற்று நீர் மழைநீர் மென்மையான நீர் என்றும் சொல்லப்படுகிறது. ஆற்று நீரில் கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் சல்பேட் குறைவாக இருக்கும்.
மேலும் படிங்கஒரே வாரத்தில் 3 கிலோ எடையைக் குறைக்கலாம்! இதை செஞ்சா போதும்…
போர்வெல் தண்ணீரில் கால்சியம் கார்பனேட், மெக்னீசிய சல்பேட் அதிகமாக இருப்பதாக சொல்வார்கள். தலைமுடியில் போர்வெல் தண்ணீர் படும் போது உப்பு வேரில் படிந்து முடியின் மென்மை, வளையும் தன்மை மாறி முடி உடைவதாக சிலர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 20 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்கு தலா பத்து பேர் போர்வெல் தண்ணீரிலும், ஆற்று நீரிலும் குளித்தனர். அதன் பிறகு 20 பேரின் தலைமுடி வலிமை சோதனை செய்யப்பட்டது. எவ்வித மாற்றமும் இன்றி அனைவரது முடியின் வலுவும் ஒரே மாதிரியாக இருந்தது. இதனால் முடி வேரில் இருந்து உதிர்வதற்கு உப்பு தண்ணீர் மீது பழி போட முடியாது.
மேலும் படிங்கஇரவு பணி செல்வோருக்கு ஏற்ற உணவுகள்!
ஆறு மாதங்கள் அல்லது மூன்று வருடம் உப்பு தண்ணீரில் குளித்தால் முடி உடையுமா என்றால் அதற்கு நீண்ட ஆராய்ச்சி தேவை. ஊட்டச்சத்து குறைபாடு முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம். இதற்கு தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation