
Hair Care Tips: குளிர்காலம் தொடங்கும் போது, பலருக்கும் சருமம் மற்றும் கூந்தல் வறட்சி ஒரு பெரும் பிரச்சனையாக மாறும். சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது போல, கூந்தலுக்கும், உச்சந்தலைக்கும் போதுமான ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்து அளிப்பது மிகவும் அவசியம். இதற்காகவே நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு அற்புதமான வைத்தியம் தான் வெதுவெதுப்பான எண்ணெய் குளியல் அல்லது சிகிச்சை (Hot Oil Treatment).
சாதாரண எண்ணெய் மசாஜை விட, எண்ணெய்யை லேசாக சூடாக்கி உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வது, எண்ணெய்யின் சத்துகள் கூந்தலுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகிறது. இதன் விளைவாக, வறண்ட கூந்தல் புத்துயிர் பெறுவதுடன், பல கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக, தேங்காய் எண்ணெய்யை இதற்கு பயன்படுத்தும் போது அதன் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.
வெதுவெதுப்பான எண்ணெய் சிகிச்சை அனைத்து வகையான கூந்தலுக்கும், குறிப்பாக வறண்ட, சேதமடைந்த அல்லது கலரிங் செய்யப்பட்ட கூந்தலுக்கு மிகவும் ஏற்றது. உங்கள் கூந்தல் நுனிகள் பிளவுபடுதல், உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அல்லது வறண்ட உச்சந்தலை அரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் இந்த மசாஜை மேற்கொள்ளலாம். குளிர்காலத்தில் இந்த சிகிச்சை உங்கள் கூந்தலுக்கு அளிக்கும் 6 முக்கிய பயன்கள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: Hair Care Tips: பாரம்பரிய கூந்தல் பராமரிப்பு முறையை பயன்படுத்தி உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எளிய குறிப்புகள்
வெதுவெதுப்பான எண்ணெய் குளியலை தொடர்ந்து மேற்கொள்வது, கூந்தலின் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. இதனால், சீப்பு பயன்படுத்துதல், சிகை அலங்காரம் செய்தல் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் அழுத்தம் போன்ற வெளிப்புற தாக்குதல்களை முடி தாங்கி கொள்ளும் வலிமை பெறுகிறது. முடி இழைகள் வலிமையடைவதால், கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரத் தொடங்குகிறது.
வெப்பமான ஸ்டைலிங் கருவிகள், இரசாயன சிகிச்சைகள் அல்லது கடுமையான வானிலை போன்ற காரணங்களால் முடி இழைகளில் பிளவுகள் மற்றும் சேதம் ஏற்படலாம். சூடான எண்ணெய் உச்சந்தலையில் பயன்படுத்தப்படும் போது, கூந்தலை மென்மையாக்குகிறது. இதனால் சேதமடைந்த முடி சீரமைக்கப்பட்டு, ஆரோக்கியமான தோற்றத்தை பெறுகிறது. சேதமடைந்த கூந்தலுக்கு இந்த சிகிச்சை ஒரு உயிரூட்டும் மருந்தாக செயல்படுகிறது.

கூந்தல் முனைகள் பிளவுபடுவதை எந்த சிகிச்சையாலும் முழுமையாக சரிசெய்ய முடியாது என்றாலும், வெதுவெதுப்பான எண்ணெய்யை கூந்தலில் தொடர்ந்து தடவுவது, பிளவுபடும் தன்மையை குறைக்கிறது. இது கூந்தலை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. இதனால், அடிக்கடி முடி வெட்ட வேண்டிய தேவை குறைகிறது. இதன் மூலம் கூந்தலின் ஒட்டுமொத்த நீளத்தையும், பளபளப்பையும் பராமரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க: Dandruff Home Remedies: குளிர்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ
வறண்ட கூந்தல் மற்றும் செதில்களாக உதிரும் பொடுகு ஆகியவை குளிர்காலத்தில் அதிகரிக்கும். வெதுவெதுப்பான எண்ணெய், கூந்தல் உள்ளிழைக்குள் ஆழமாக ஊடுருவி, இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது. இது வறண்ட, உதிர்வதற்கு தயாரான முடி இழைகளை பழுதுபார்த்து, அவற்றுக்கு உயிர் கொடுத்து, மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. இதனால் உச்சந்தலையும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதால், பொடுகு தொல்லை அதிகரிக்கும். பல நேரங்களில், இந்த வறட்சி தான் அரிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது. வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வது, உச்சந்தலைக்கு நீர்ச்சத்தை அளித்து, வறட்சியை குறைக்கிறது. இதனால் பொடுகு கணிசமாக குறைகிறது. ஆரோக்கியமான ஈரப்பதம் கொண்ட உச்சந்தலை பொடுகு உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது.

வெதுவெதுப்பான எண்ணெய்யால் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது, அது இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு மேம்பட்ட இரத்த ஓட்டம் மிக முக்கியம். அதிகரித்த இரத்த ஓட்டம் முடி வேர்க்கால்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கிடைக்க செய்கிறது. இது வேர்களை வலிமையாக்குவதுடன், புதிய முடி வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமைகிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த வெதுவெதுப்பான எண்ணெய் குளியல் முறையை நீங்கள் எளிதாக மேற்கொள்ள முடியும்.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த எண்ணெய் குளியலை மேற்கொள்வதற்கு முன்பாக உங்களுக்கு அந்த எண்ணெய்யின் மூலம் ஒவ்வாமை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இது தேவையற்ற சிக்கல்களை தடுக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]