நம்முடைய உடல் எடை அதிகரிக்க ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முக்கிய காரணமாகும். நம்மில் பெரும்பாலானோர் உடல் உழைப்பின்றி கணினி முன் அமர்ந்து எந்தவித செயல்பாடுமின்றி வேலை செய்கிறோம். இதனால் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு சேர்ந்து எடை அதிகரிக்கிறது. இதன் பிறகும் சிலர் உடல் எடையைக் பற்றி கவலைப்படுவதில்லை. ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நோய் பாதிப்புக்கு ஆளாகும் போதே எடை அதிகரிப்பை பற்றி சிந்திக்கிறோம். நீண்ட வேலை நேரத்தால் உடற்பயிற்சி செய்து உடல்எடையைக் குறைப்பது சாத்தியமற்றதாக தோன்றும் நபர்களுக்காக இந்த கட்டுரை...
எடையைக் குறைக்க நாம் ஜிம் சென்று பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டிற்கு வாங்கும் உணவுப் பொருட்களை கொண்டே எடையைக் குறைக்கலாம். உணவுமுறை மாற்றத்தால் கூட ஒரே வாரத்தில் மூன்று கிலோ எடையைக் குறைக்க முடியும்.
காலை 6 மணி
வெறும் வயிற்றில் கொழுப்பை குறைக்கும் டானிக்கை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும். கடைகளில் கிடைக்கும் இந்த கொழுப்பு கரைக்கும் டானிக் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலில் கொழுப்பு கரைப்பை வேகப்படுத்தும் இந்த டானிக் செரிமானத்திற்கும் சிறந்தது.
காலை உணவு
உடல் ஆரோக்கியத்திற்கு மாவுச்சத்து கொண்ட உணவுகளை விட புரதச்சத்து, நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதற்கு நாம் வேகவைத்த பருப்பு உருண்டை சாப்பிட வேண்டும்.
பருப்பு உருண்டை செய்முறை
- ஒரு கப் துவரம் பருப்பு மற்றும் அரை கப் கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறவைக்க நேரமில்லாத பட்சத்தில் மூன்று மணி நேரத்திற்கு பதிலாக சுடு தண்ணீரில் ஒருமணி நேரம் துவரம் பருப்பு, கடலைப் பருப்பை ஊறவைக்கவும்.
- இதை மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள், இரண்டு ஸ்பூன் இஞ்சி, தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
- இதில் கொஞ்சம் கறிவேப்பிலையும், கொத்தமல்லியும் போடவும். உங்களிடம் கீரை இருந்தால் கொத்தமல்லிக்கு பதில் கீரை சேர்க்கவும். கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கொழுக்கட்டை போல் பிடித்து இட்லி தட்டில் சுமார் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- ஐந்து வேகவைத்த பருப்பு உருண்டையை சாப்பிட்டால் போதும் அடுத்த ஐந்து மணி நேரத்திற்கு பசி எடுக்காத அளவிற்கு முழுமையாக உணர்வீர்கள்.
மேலும் படிங்கஇரவு பணி செல்வோருக்கு ஏற்ற உணவுகள்!
மதிய உணவு
- வெந்தயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை, தலா பத்து கிராமிற்கு உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை கடாயில் போட்டு நல்லெண்ணெயில் வறுக்கவும்.
- இதோடு ஒரு கப் ஓட்ஸ், தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கும் தண்ணீர் ஊற்றி எட்டு நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். இந்த ஓட்ஸ் உப்புமாவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.
- உடல் எடையைக் குறைக்க டயட் பின்பற்றினால் பட்டினி இருக்க வேண்டும் என அவசியமில்லை. ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவதும் டயட் தான்.
இரவு உணவு
ஆந்திராவின் மிகப் பிரபலமான பெசரட்டு இரவு நேரத்திற்கான சிறந்த உணவாகும். இதற்கு ஒரு கப் பாசி பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
இதனுடன் உங்களுக்கு பிடித்தமான அரை கட்டு கீரையை சேர்த்து மிக்ஸியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். இதை தோசைக் கல்லில் ஊற்றி கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பெசரட்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும்.
இரவு நேர பானம்
தூங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பாலுடன் கொஞ்சம் மஞ்சள், மிளகு, நட்சத்திர சோம்பு சேர்த்து கொதிக்க விட்டு அதன் சூடாறிய பிறகு சுத்தமான தேன் சேர்த்து குடிக்கவும். இது சிறந்த தூக்கத்திற்கு உதவும்.
இந்த உணவுமுறையை நீங்கள் ஒரு வாரத்திற்கு கடைபிடித்தால் நிச்சயம் மூன்று கிலோ எடையைக் குறைக்கலாம். மேலும் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation