Benefits of gooseberries: பெரிய நெல்லிக்காயில் இத்தனை அற்புத நன்மைகள் உள்ளதா?

இதய ஆரோக்கியம், முடி வளர்ச்சி, சரும பராமரிப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு காணும் நெல்லிக்காய்

Gooseberry benefits

நம்முடைய உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஓர் கனி என்றால் அது நெல்லியாகத்தான் இருக்க முடியும். அதிக புளிப்புச்சுவைக் கொண்டதால் பலரும்நெல்லிக்காய் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள். சிறிய நெல்லிக்காயைக் கூட எப்படியாவது சாப்பிட்டாலும் பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடிக்காது. ஆனால் இவற்றில் தான் ஏராளமான அற்புதக்குணங்கள் உள்ளது என உங்களுக்குத்தெரியுமா?

இதெல்லாம் தெரிஞ்சா? இனி நெல்லிக்காயை வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள். வாங்க பெரிய நெல்லியில் உள்ள அற்புத நன்மைகள் என்னென்ன?என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்..

healthy Amla benefits

பெரிய நெல்லிக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள்:

மேலும் படிக்க:குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய இந்திய பழங்களின் லிஸ்ட்!

ஊட்டச்சத்துக்கள்:

  • எந்த பருவ காலத்திலும் மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்குத் தேவையான வைட்டமின்கள்,கனிமங்கள்,நார்ச்சத்து,ஃபீனால்கள் மற்றும் பிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைத் தன் வசம் கொண்டுள்ளது தான் நெல்லிக்காய்.
  • தினமும் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் உடலை சமச்சீராக வைத்திருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

தோல் பராமரிப்பு:

  • இயற்கையான முறையில் உங்களது சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால், நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். இதில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவக் குணங்கள், உங்களது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.
  • நீங்கள் நெல்லிக்காய் பொடி மற்றும் தயிர் கலந்து வாரத்திற்கு இருமுறை பேசியல் செய்யும் போது முகத்தில் உள்ள தேவையற்ற செல்களை அழித்து பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

புற்றுநோய்க்கு எதிரானது:

  • நெல்லிக்காயில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. எனவே ஆண்கள் முதல் பெண்கள் வரை தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் தினமும் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நெல்லிக்காயைப் பொடியாக்கி தேநீராக அல்லது நெல்லிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடவும். இது நாள்பட்ட நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது:

நெல்லிக்காயில் அந்தோசயினின்கள்,ஃபிளாவனாய்டுகள்,பினோலிக் அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

HealthyAmala

இதய ஆரோக்கியம்:

  • உடலில் தேவையற்ற கொழுப்பினால் உண்டாகும் எடை அதிகரிப்பு இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.எனவே நீங்கள் நெல்லிக்காயை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவு:

நெல்லிக்காயில் உள்ள எலாகிடானின்கள் சேர்மங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதோடு மட்டுமின்றி நெல்லிக்காயை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது இதில் உள்ள வைட்டமின் சி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP