herzindagi
winter diet foods list

winter fruits: குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய இந்திய பழங்களின் லிஸ்ட்!

குளிர்கால தொற்றுநோய்களிலிருந்து  தப்பிக்க வேண்டும் என்றால் சீசனில் விளையக்கூடிய பழங்களையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
Editorial
Updated:- 2023-12-17, 10:53 IST

குளிர்காலத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கோம். ஜில்லென்ற சூழல் மனதிற்கு இதமாக இருந்தாலும் இந்த பருவக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகள் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறது. காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, உடல் வலி, சோர்வு, மலேரியா, டெங்கு காய்ச்சல் என பருவ காலத் தொற்றுகளை அடிக்கிக்கொண்டே போகலாம். வானிலை மாற்றத்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இதுப்போன்ற பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது. எனவே தான் மற்ற பருவ காலங்களை விட குளிர்காலங்களில் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பழங்களைச் சாப்பிடுவது நமது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, வலுவான ஆற்றலையும் தருகிறது.

guava

இருந்தப்போதும் குளிர்காலங்களில் பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடித்துவிடும் என்ற அச்சத்தில் குழந்தைகளுக்கு  பழங்கள் குடுப்பதை முற்றிலும் நிறுத்திவிடுவோம். இதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு, உங்களின் உணவில் கட்டாயம் இந்த இந்திய பழங்களை உங்களது உணவில் ஒரு பகுதியாக மாற்றக் கொள்ள வேண்டும். இதோ என்னெ்ன பழங்கள்? என இங்கே அறிந்துக் கொள்வோம்..

மேலும் படிக்க: குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் !

குளிர்காலத்திற்கு ஏற்ற பழங்கள்:

மாதுளை:

  • குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று தான் மாதுளை. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. உடலில் இரத்த எண்ணிக்கையும் அதிகரிக்க உதவுகிறது என்பதால் இரத்த சோகை உள்ள பெண்கள் குளிர்காலத்தில் மாதுளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
  • தினமும் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்த அழுத்தம், இதய பாதிப்பு நோய்களைச் சரிசெய்கிறது. சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆரஞ்சு:

வைட்டமின் சி,கால்சியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் இருப்பதால் உடலுக்கு ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொய்யா:

  • குளிர்காலத்தில் செரிமானப் பிரச்சனைகன் அதிகளவில் ஏற்படக்கூடும். இது உடலில் ஆற்றலைக்குறைக்கும் என்பதால் கொய்யா பழங்களை நீங்கள் உட்கொள்ளலாம். 
  • கொய்யாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து செரிமான பிரச்சனையை எதிர்த்து போராட உதவும் அதே வேளையில் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரிகள்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் ஸ்ட்ராபெர்ரி. இனிப்புச் சுவை குறைவாக இருந்தாலும் இதன் தோற்றமே அனைவரையும் கவரக்கூடும். இதை நீங்கள் எந்த பருவக்காலங்களிலும் சாப்பிடலாம். குறிப்பாக குளிர்காலத்தில் சாப்பிடும் போது இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

strawberry

சப்போட்டா:

  • இந்திய பழங்களில் முக்கியமான ஒன்று. இதில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 
  • இரத்த அழுத்ததைக் கட்டுக்குள் வைத்திருக்கவம், நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைப்பதற்கு சப்போட்டா பழங்கள் உதவுகிறது.

மேலும் படிக்க :நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளிர்கால உணவுகள்!

ஸ்டார் ப்ரூட்:

  • நவம்வர் முதல் ஜனவரி வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. இந்த குளிர்காலத்தில், சூடாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஸ்டார் ப்ரூட்களை நீங்கள் சாப்பிடலாம்.
  • இது உங்களது உடலை நீரேற்றத்துடனும், கதகதப்புடனும் வைத்திருக்க உதவுகிறது.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]