ஆப்பிள் சைடர் வினிகர் சமையளுக்கு மட்டுமல்லமால் பல வழிகளில் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மற்றும் அழகு சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க உணவில் சேர்த்துக் கொள்வதாக இருந்தாலும் சரி, வீட்டைச் சுத்தம் செய்வதற்காக இருந்தாலும் சரி, பல விதங்களில் பலன் தரும் இந்த ஆப்பிள் சைடர் வினிகர். அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பல கட்டுரைகளை பார்த்திருக்கிறொம், அதேபோல் பல் பிரச்சனைகளுக்கு திறம்பட செயல்படும் இந்த ஆப்பிள் சைடர் வினிகர். ஆப்பிள் சைடர் வினிகர் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவது போல், பல்வலி, வாய் துர்நாற்றம், பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்குதல் மற்றும் ஈறுகளை வலுப்படுத்துதல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது நன்மை பயக்கும்.
மேலும் படிக்க: பல் குச்சி மெல்லும் பழக்கம் இருந்தால் இந்த தீமைகள் பற்றி தெரிந்துகொள்ளவும்
பல்வலியைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. எனவே பல் மருத்துவர்களும் இதைப் பற்களில் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். பல்வலியை குறைக்க, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து வாயில் ஊற்றி சுற்றவும். முக்கியமாக வலி அதிகமாக இருக்கும் பல்லின் பகுதிக்கு அருகில் வைத்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் வாயில் இருக்கும் பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது மற்றும் பல் தொற்றுநோயைக் குறைக்க செய்யும். மேலும் பற்களில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை படிப்படியாக குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: 50 வயதிலும் இளமையாகவும் அழகாகவும் இருக்க இந்த 5 விஷயங்களைப் பாலோ பண்ணுங்கள்
ஈறு அழற்சி என்றால் ஈறுகளில் தொற்று மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் பொதுவான பல் பிரச்சனைகளில் ஒன்றாகும். பல் துலக்கும்போதும் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் வாய் துர்நாற்றம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் வினிகரை பயன்படுத்தலாம் . இதை 4 ஈறு பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 1 கப் தண்ணீரில் கலந்து நன்கு வாயை கொப்பளிக்கவும். நல்ல முடிவுக்கு இந்த நடைமுறையை ஒரு நாளைக்கு 2 முதல் மூன்று முறை பின்பற்றவும். இதில் இருக்கும் அமிலத்தின் காரணமாக pH அளவை சாதாரணமாக சமநிலைப்படுத்துகிறது மற்றும் பற்கள், ஈறுகளுக்கு இடையில் பாக்டீரியாக்கள் குவிவதைத் தடுக்கிறது. இது ஈறு அழற்சியைக் குறைக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், புரோபயாடிக்குகள் மற்றும் என்சைம்கள் போன்ற தனிமங்கள் இருக்கிறது. இது இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால், பற்களில் சிக்கியுள்ள பிளேக் அல்லது பிற பொருட்களை உடைக்க உதவுகிறது. ஆப்பிள் சைடர் வினிகரின் pH பற்களில் உள்ள கறைகளை நீக்கி பற்களை இயற்கையாகவே வெண்மையாக்க உதவுகிறது. அசிங்கமாக தோற்றம் அளிக்கும் பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க உதவுகிறது. பற்களில் இதைப் பயன்படுத்த 1 முதல் 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு விரலின் உதவியுடன் பற்களில் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் தேய்த்து, அதன்பிறகு வாயை தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி பற்களை கழுவிய பிறகு உடனடியாக பிரஸ் செய்ய வேண்டும், ஏனெனில் அதில் இருக்கும் அமில உறுப்பு நீண்ட நேரம் பற்களில் வைத்திருந்தால் பற்கள் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]