இந்தியாவில் உணவு வகைகளில் பல வகையான உணவுகள் உள்ளது. அதில் திடமான உணவுகளும் அதிகமாக சாப்பிட செய்கிறோம். இது போன்ற உணவுகள் பற்களின் இடையில் சிக்கிக்கொள்கிறது. இதுபோன்ற நிலைகளில் பல் குச்சிகளை பயன்படுத்துகிறோம். இதனால் பற்களில் சிக்கிய உணவை அகற்ற எளிதாக இருக்கும். இதனை எப்பொழுதாவது பயன்படுத்து தீங்கு இருக்காது. ஆனால் பல் குச்சியை வைத்து அடிக்கடி பற்கலில் தோண்டி எடுப்பதால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.
பல் குச்சி அடிக்கடி ஒரே இடத்தில் பயன்படுத்துவதால் பல்களுக்கும், ஈறுகளுக்கும் இடையில் துளைகள் ஏற்படும். இப்படி நீண்ட நேரம் செய்வதால் பற்கள் இடத்திலிருந்து மாறக்கூடிய அளவுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. பல் குட்டி பற்களுக்கு இடையில் இல்லாத கூடுதல் இடத்தை உருவாக்குகிறது. இந்த கூடுதல் இடத்தின் காரணமாக, மீண்டும் மீண்டும் தோண்டுவது பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அதிகரிப்பதால், உணவு மீண்டும் மீண்டும் இங்கு சிக்குவது போன்ற பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க: ஹாட்டான செம்பருத்தி தேநீர் குடித்தால் உடலுக்கு கொடுக்கு ஜில்லான ஆரோக்கிய நன்மைகள்
பல் குச்சிகளை மெல்லும் பழக்கம் இருப்பவர்களுக்கு இரண்டு ஆபத்துகள் ஏற்படும். முதலாவதாக பல் குச்சி சதைகளில் உடைந்து ஈறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் மற்றும் பல் குச்சி துண்டுகள் பற்கள் இடையில் சிக்கிக்கொண்டு பிரச்சனைகள் ஏற்படுன். இரண்டாவது பிரச்சனை என்னவென்றால் பற்களின் பற்சிப்பிக்கு தீங்கு விளைவிக்கும். பல் குச்சி மெல்லும் பழக்கத்தால் நிறம், மெல்லும் சக்தி மற்றும் மேல் அடுக்கு ஆகியவற்றை சேதப்படுத்துகிறது.
தற்செயலாக பற்களுக்கு இடையில் ஒரு பல் குச்சி உடைந்தால், மேலும் ஆபத்தானதாகிவிடும். ஈறுகளில் சிறிய மரத் துண்டுகள் சிக்கி, பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம்.
மேலும் படிக்க: 50 வயதிலும் இளமையாகவும் அழகாகவும் இருக்க இந்த 5 விஷயங்களைப் பாலோ பண்ணுங்கள்
வாயில் பல் குச்சி வைத்தால் அது எங்கே சிறு காயங்களை ஏற்படுத்தும் என்பதை பார்க்க முடியாது. பல நேரங்களில் ஈறுகளில் துளைகளை ஏற்படுத்துகிறது அல்லது காயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோயை அதிகரிக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]