herzindagi
ear infection in children

Ear Infection In Children: குழந்தைகளுக்கு காதில் தொற்று பாதிப்பா? சரி செய்வதற்கான எளிய வீட்டு வைத்திய முறைகள்.

காது வலி ஏற்படும் சமயத்தில், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வலி மருந்துகளை உபயோகிக்கலாம்.
Editorial
Updated:- 2024-02-09, 18:06 IST

குழந்தைகளைப் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சவாலான விஷயம். அதிலும் பருவ கால தொற்றுகள், காய்ச்சல், இருமல், சளி போன்ற பல்வேறு தொற்றுகள் பாதிக்காமல் பாதுகாப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமம் தான். இத்தகைய பாதிப்புகளில் ஒன்றான காது வலி மற்றும் காதில் ஏற்படும் தொற்று பாதிப்பால் குழந்தைகள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்?  இதற்கானத் தீர்வு என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

Ear infection

காது தொற்றால் ஏற்படும் பாதிப்புகள்:

  • காது வலி, காதில் சீல் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நேரங்களில் காதுகளில் நோய்த் தொற்று தீவிரமாகும் போது தற்காலிக அல்லது நிரந்தர காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் செவிப்பறைக்குள் யூஸ்டாசியன் குழாய் அடைப்பு ஏற்பட்டால், நிரந்தரமாக செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
  • காதுகளில் தொடர்ச்சியாக சீல் வடியும் போது வலி அதிகமாக இருக்கும். இதற்கான சிகிச்சை முறையாக அளிக்கப்படாத போது தான், காதில் அதிக சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
  • காது நோய்த்தொற்றின் விளைவாக ஏற்படும் பாக்டீரியா தொற்று மூளை மற்றும் முதுகுத் தண்டு உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பல நேரங்களில்  மூளைக்காய்ச்சல் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

மேலும் படிங்க: உடல் எடையைக் குறைக்க தேங்காய் எண்ணெய் உதவுமா?

காது வலியைக் குணப்படுத்த வீட்டு வைத்தியங்கள்:

  • காது வலி அதிகமாக இருக்கும் போது வெதுவெதுப்பான நீரைக் கொண்டு காது பகுதிகளில் ஒத்தனம் வைக்க வேண்டும்.  இந்த சிகிச்சை முறை வலியை தற்காலிகமாக குறைக்க உதவுகிறது.
  • காது வலி ஏற்படும் சமயத்தில், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வலி மருந்துகளை உபயோகிக்கலாம்.
  • காதில் ஏற்படும் வலியைக் குறைக்க வேண்டும் என்றால், நாள் முழுவதும் நிறைய திரவங்களைக் குடிக்க வேண்டும். முடிந்தவரை சூடான தண்ணீரைக் குடிக்கும் போது தொண்டை, காதுகள் மற்றும் சைனஸ் பாதிப்பைக் குறைக்க உதவியாக இருக்கும். 
  • காதுகளில் அவ்வப்போது சீல் வடிதல் அல்லது அழுக்குகள் இருந்தால் காட்டன் துணியைக் கொண்டு காதுகளின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

symptoms of ear infection

  • காது வலி பிரச்சனையை சரி செய்வதற்கு உங்களது உணவு முறையில் பூண்டு அதிகளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் காதுகளில் நோய்த் தொற்றால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. இதோடு எதிர்காலத்தில் எவ்வித காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.  

மேலும் படிங்க: கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்; தவிர்ப்பது எப்படி?

  • குளிர்காலத்தில் வெளியில் செல்வது, நீச்சல் குளங்களில் குளித்தல் போன்றவற்றால் காதுகளுக்குத் தண்ணீர் புகுந்து வலி ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது.

Image credit - Google

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]