herzindagi
tips to cocont oil helps weight loss

Weight Loss: உடல் எடையைக் குறைக்க தேங்காய் எண்ணெய் உதவுமா?

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">உணவு முறையில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளும் போது, உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது.</span>
Editorial
Updated:- 2024-02-09, 13:17 IST

தேங்காய் எண்ணெய் என்றாலே முடி நீளமாக வளர்வதற்கும், சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்பதைத் தான் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. சமீபத்திய ஆய்வுகளின் படி, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்று தேங்காய் எண்ணெய்யை, சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்றும் இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உடல் குறைப்பிற்கு உதவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதோ எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

coconut oil ()

உடல் எடை குறைப்பில் தேங்காய் எண்ணெய்:

மேலும் படிங்க: கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்; தவிர்ப்பது எப்படி?

  • நம்முடைய உணவு முறையில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளும் போது, உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. இதனால் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் எளிதில் ஜீரணமாகி, கழிவுகள் சீராக வெளியேறுவதால் தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர்வதற்கு வாய்ப்பில்லை. மேலும் வயிற்றில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. 
  • தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவுப்பொருள்களை நாம் சாப்பிடும் போது, உடலில் அதிக கீட்டோன்களை உருவாக்கிறது.  கீட்டோன்கள் நம்முடைய உடலின் ஆற்றலை அதிகப்படுத்துவதோடு, உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மிதமான அளவில் தேங்காய் எண்ணெய்யை உட்கொள்வது உங்கள் பசியை தற்காலிகமாக குறைக்க உதவியாக இருக்கும்.
  •  தேங்காய் எண்ணெய் லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் மற்றும் ஆரோக்கியமான குடல் அமைப்சை சரி செய்யவும் உதவுகிறது. சமீபத்திய ஆராய்ச்சிகளில் கூடநம்முடைய உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் தேங்காய் உதவியாக உள்ளது என நிரூபணமாகியுள்ளது. 

benefits of coconut oil

  • தேங்காய் எண்ணெயில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்களது மன அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். எனவே அதிக உடல் பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு வளர்சிதை மாற்ற நிலைமைகளுக்கு மிதமான அளவில் தேங்காய் எண்ணெய்களை உபயோகிப்பது நல்லது. 
  • தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இதில் உள்ள லாரிக் அமிலம், உயர் அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும். 

மேலும் படிக்க: மாதவிடாய் காலத்தில் அதீத வயிற்று வலியா? அப்ப நீங்கள் செய்ய வேண்டியது?

 how to use coconut oil

இது போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால், முடிந்தவரை இனி சமையலில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். பொதுவாக தமிழ்நாட்டில் அதிகளவில் தேங்காய் எண்ணெய்களை வைத்து சமைக்கும் பழக்கம் இல்லை. கேரளாவில் சமையலுக்கு அதிகமாக தேங்காய் எண்ணெய்களைத்  தான் பயன்படுத்திகின்றனர். நாமும் இனி தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற முடியும் என்பதோடு நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Image Credit- Google

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]