Varalakshmi Vratham Diet: வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் பெண்கள் இந்த உணவு வழக்கத்தில் கவனம் செலுத்துங்கள்

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் சரியாகச் செய்யாவிட்டால் பலவீனமாக உணரலாம்! இந்த உணவு வழக்கத்தை பாலோ பண்ணுங்க!!

Varalakshmi viratham  image

ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதத்தின் போது லட்சுமி தேவியை வேண்டி வீட்டில் அனைத்து செல்வத்தையும் பெருக செய்யக்கூடிய நிகழ்வாகும். வரலட்சுமி விரதத்தின் போது பெண்கள் நாள் முழுவதும் உணவு உண்ணாமல் லட்சுமி தேவிக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்வார்கள். இப்படி செய்வது உடலை பலவீனமடைய செய்யும். அதுவும் அன்றைய நாட்களில் அதிகப்படியான வேலைகளை செய்ய வேண்டியது இருக்கும். அவற்றை அனைத்தையும் செய்ய உடலில் ஆற்றல் சக்தி அதிகமாக இருக்க வேண்டும். சில உப்பு சேர்க்க உணவுகளை விரதத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அவை என்னென்ன உணவிகள் என்பதை பார்க்கலாம்.

வரலட்சுமி விரதத்திற்கு உணவு குறிப்புகள்:

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

healthy diet viratham

காலையில் நீங்கள் சாப்பிடும் போது ஒரு நல்ல உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளு வேண்டிம். ஒரு கிளாஸ் பால் அல்லது மோர் சேர்த்து கொள்ளலாம். உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்கும் உதவும் பழங்களை சாப்பிடலாம். இந்த காலை உணவில் சர்க்கரை இல்லாமல் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

நீர்ச்சத்துடன் இருப்பது அவசியம்

உண்ணாவிரதத்தின் போது நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இது பசி வேதனையை கணிசமாகக் குறைக்கும். இதுமட்டுமின்றி தண்ணீர் குடிப்பதால் சோர்வு மற்றும் மயக்கம் வருவதை சமாளிக்க உதவுகிறது. எப்பொழுதும் ஒரு தண்ணீர் பாட்டிலை தன்னுடன் வைத்துக் கொண்டு வேலை செய்யுங்கள் சரியான நேரத்தில் பருகிக்கொண்டே இருக வேண்டும்.

குளிர்ந்த பால்

milk website

சில நேரங்களில் விரதம் மேற்க்கொள்ளும் போது உடலில் நச்சுத்தன்மை ஏற்படும், சிலருக்கு அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் பிரச்சனைகள் வரலாம். அதைச் சமாளிக்க இடையில் குளிர்ந்த பால் குடித்து அமிலத்தன்மையைத் தடுக்கலாம். மாலை 4 மணிக்கு மேல் அல்லது இரவில் நேரங்களில் குடிக்கலாம். இந்த பிரச்சனையை சமாளிக்க உங்கள் உணவில் எலுமிச்சை அல்லது தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.

நார்ச்சத்துக்கான பழங்கள்

விரதத்தின் போது பழங்கள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை மட்டுமே கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். பழங்கள் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் குடல் இயக்கத்திற்கு உதவும் நார்ச்சத்தையும் தருகிறது. வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள் மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களைச் சேர்க்கவும்.

பருப்புகள்

Varalakshmi viratham  nuts

நல்ல கொழுப்புகள் நிறைந்த பாதாம், வால்நட், பிஸ்தா உள்ளிட்ட உப்பில்லாத பருப்புகளை பகலில் சாப்பிடுங்கள். உங்கள் நாளில் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சை போன்ற இனிக்காத உலர் பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவு உலர்ந்த பழங்கள் என்பதால் குடலுக்கு உதவும்.

தேங்காய் தண்ணீர்

உண்ணாவிரதத்தின் போது பகலில் எப்போதாவது தேங்காய் தண்ணீர் மற்றும் வாழைப்பழம் உட்கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க தங்க நிறப் பால்!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit- Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP