கர்ப்பம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மிகவும் உற்சாகமான கட்டங்களில் ஒன்றாகும். அந்த வேலையில் முதல் முறையாக தாய்மார்கள் கேள்விகளால் நிரம்பி வழிகிறார்கள் அந்த கேள்விகளுக்கு உறவினர்களால் கூறும் பதில்களையே நம்புகிறோம். ஆனால் நீங்கள் உண்மையில் அதை நம்ப வேண்டுமா?
பல நேரங்களில் பரிந்துரைகள், அறிவுரைகள் மூடநம்பிக்கைகள் மற்றும் உண்மை இல்லாத தவறான கதைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கட்டுக்கதைகளை உருவாக்குகிறது. அதனால் நம்பக்கூடாத பொதுவான ஐந்து கர்ப்ப கட்டுக்கதைகளைப் பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் நாட்களில் தாங்கமுடி வலியை அனுபவித்தல்.. இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!!
ஒரு கர்ப்பிணிப் பெண் தனது உணவை இரட்டிப்பாக்க வேண்டும் என்று எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று பலர் கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது உங்கள் குழந்தைக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது உண்மையில் இல்லை. கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரிப்பது பிரசவத்தை கடினமான செயல்முறையாக மாற்றும். எனவே உங்கள் உணவு முறை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். முதலில் உங்கள் மருத்துவரிடம் சென்று உடற்பயிற்சி பற்றி ஆலோசனை பெற்று பயிற்சி செய்ய வேண்டும், ஆனால் வயிற்று தசைகளை கஷ்டப்படுத்தும் பயிற்சிகளை செய்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளைப் பின்பற்றுவது கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானது.
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது தாய் மற்றும்/அல்லது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல! சில பெண்களுக்கு கர்ப்பம் உடலுறவை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது! எனவே, நீங்கள் அதற்கான மனநிலையில் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை.
கர்ப்ப காலத்தில் உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூச கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தால் அது ஒரு கட்டுகதை. முடி நிறத்தில் காணப்படும் இரசாயனங்கள் கருவை பாதிக்கும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது உண்மையல்ல.
இந்த பதிவும் உதவலாம்: ஒரே ஒரு பழம் சாப்பிட்டால் போதும் பிரசவ நேரத்தில் வலி குறைவாக இருக்கும்!!
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]