உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் மலேரியாவால் தங்கள் உயிரை இழக்கிறார்கள். எனவே, இந்த தினத்திற்கான நோக்கம் மலேரியாவைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதாகும். இன்று, இந்த சிறப்பு நாளில், மலேரியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறவுள்ளோம். இந்த தகவலை BLK-Max சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இன்டர்னல் மெடிசின் இயக்குனர் டாக்டர் அதுல் பாசின் பகிர்ந்துள்ளார்.
மலேரியா என்றால் என்ன?
மலேரியா ஒரு ஒட்டுண்ணி தொற்று ஆகும், இது கொசு கடியால் ஏற்படுகிறது. நம்மை கொசு கடிப்பதால் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணி பரவுகிறது. குறிப்பாக மனிதர்களுக்கு பரவும் மலேரியாவில் 5 வகைகள் உள்ளன. இந்த கொசு கடிப்பதன் மூலம் பிளாஸ்மோடியம் எனும் ஒரு வகை பாக்டீரியா மனித உடலில் நுழைகிறது. அதன் பிறகு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த பாக்டீரியாக்கள் கல்லீரல் மற்றும் ரத்த அணுக்களை பாதிக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை நோய்வாய்பட வைக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும்.
இதுவும் உதவலாம்:மலேரியா அண்டாமல் இருக்க நீங்கள் செய்யவேண்டியவை
மலேரியாவின் வகைகள்
மேலே கூறியபடி மலேரியாவில் 5 வகை உண்டு.
பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் சுயநினைவு இழந்து விடுகிறார். மயக்கத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பது கூட அவருக்கே தெரியாமல் போய் விடும். பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குளிராக உணர தொடங்குவார்கள். மேலும் அவர்களுக்கு தலைவலி மற்றும் வாந்தியும் ஏற்படும்.
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
வைவாக்ஸ் ஒட்டுண்ணி பெரும்பாலும் பகலில் மட்டுமே கடிக்கும். இந்த கொசு தீங்கற்ற டெர்டியன் மலேரியாவை உற்பத்தி செய்கிறது, இது கடித்த மூன்றாவது நாளில் இருந்து, அதாவது 48 மணி நேரத்திற்குப் பிறகு அதன் வீரியத்தை காட்டத் தொடங்குகிறது. இதில், இடுப்பு, தலை, கை, கால்களில் வலியுடன் பசியின்மை மற்றும் நடுக்கத்துடன் அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
பிளாஸ்மோடியம் ஓவல்
இந்த வகை மலேரியாவும் தீங்கற்ற டெர்டியனால் ஏற்படுகிறது.
பிளாஸ்மோடியம் மலேரியா
இது குவார்டன் மலேரியாவை உருவாக்குகிறது, இதில் நோயாளிக்கு ஒவ்வொரு நான்காவது நாளிலும் ஒருமுறை காய்ச்சல் இருக்கும். ஒரு நபருக்கு இந்த நோய் இருந்தால், அவரது சிறுநீரில் இருந்து புரதம் வெளியேறத் தொடங்குகிறது, இதன் காரணமாக உடலில் புரதச்சத்து குறைபாடு மற்றும் வீக்கம் தொடங்குகிறது.
பிளாஸ்மோடியம் நோலெசி
இது தென்கிழக்கு ஆசியாவில் பொதுவாகக் காணப்படும் முதன்மையான மலேரியா ஒட்டுண்ணியாகும். இந்த மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சளியுடன் காய்ச்சலும் வரும். தலைவலி, பசியின்மை போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
மலேரியாவின் அறிகுறிகள்
அதன் அறிகுறிகள் பொதுவாக கொசு கடித்த சில நாட்களுக்குப் பிறகு தோன்றும்.
- குளிர்
- காய்ச்சல்
- தலைவலி
- வாந்தி
- உடல் வலி
- சுயநினைவு இழப்பு
சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க வேண்டும் இல்லாவிட்டால், சிறுநீரில் இரத்தத்துடன் கடுமையான தொற்று உண்டாகும் மற்றும் உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு ஏற்படும்.
இதுவும் உதவலாம்:தினமும் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மலேரியாவை தடுக்கும் வழிகள்
- இந்த நோயைத் தடுக்க, வீட்டைச் சுற்றிலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும்.
- குப்பை, அழுக்கு உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம், ஏனெனில் அங்கு கொசுக்கள் வளரும் அபாயம் அதிகம் ஆகிறது.
- தாவரங்கள் மற்றும் பாத்திரங்களில் தண்ணீர் தேங்க விட கூடாது. இதனால், மலேரியா பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளது.
- மலேரியாவை தவிர்க்க முழு கை ஆடைகளை அணியுங்கள்.
- மலேரியா கொசுக்கள் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் கடிக்கும். எனவே, இந்த நேரத்தில் முடிந்தால், வீட்டிலேயே இருங்கள்.
- கொசுக்கள் எப்போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மற்றும் வீட்டின் மூலைகளில் மறைந்திருக்கும். இந்த இடங்களில் கொசு மருந்து தெளித்து விடலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation