ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் அன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மலேராயாவிற்கு எதிராக போராடுவதற்கும், பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
அனாபிலிஸ் எனும் பெண் கொசு கடிப்பதால் மனிதர்களுக்கு மலேரியா காய்ச்சல் பரவுகிறது. இது முதலில் கல்லீரலை சேதப்படுத்துகிறது, பின்னர் உடலின் சிவப்பு இரத்த அணுக்களை அழிக்கிறது. ஒரு சில மலேரியா பரவலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். இருப்பினும் ஒரு சில சமயங்களில் ஆரம்ப நிலையிலேயே இதற்கான சிகிச்சையை அளிக்க முடியாது.
இந்த பதிவும் உதவலாம்: கோடை காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேதிக் டயட் டிப்ஸ்
மலேரியா நோய்த்தொற்றின் அறிகுறிகள்
இதன் அறிகுறிகளில் மிதமான மற்றும் கடுமையான நடுக்கம், அதிக காய்ச்சல், வலிப்பு, மஞ்சள் காமாலை, வியர்வை, தலைவலி, வாந்தி, சுவாசக் கோளாறு, அசாதாரண இரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கும் அடங்கும். பொதுவாக பாதிக்கப்பட்ட கொசு கடித்த 10 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பல மாதங்களுக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருக்கலாம். நோய்க்கிருமிகள் நீண்ட காலத்திற்கு கல்லீரலில் செயலற்ற நிலையில் இருக்கும்பொழுது இவ்வாறு நிகழ்கிறது.
தற்காப்பு நடவடிக்கைகள்
மலேரியா காய்ச்சலிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ளவும்.
சுகாதாரத்தை பராமரிக்கவும்
மலேரியா பரவலை தடுக்க சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும். இதற்கு கிருமி நாசினியை கொண்டு உங்கள் வீட்டை தினமும் துடைக்கலாம். இதனுடன் உங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கொசு விரட்டியைப் பயன்படுத்தலாம்
கொசு விரட்டியைப் பயன்படுத்தாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் 10% டையெதில்டோலுஅமைடு (DEET) செறிவு கொண்ட கொசு விரட்டியை தேர்வு செய்வது நல்லது.
முழு ஆடைகளை அணியுங்கள்
கொசுக் கடியைத் தவிர்க்க உங்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்கும் ஆடைகளான நீண்ட கை சட்டைகள் மற்றும் பேன்ட்களை அணியுங்கள்.
நறுமணமிக்க தாவரங்கள்
பொதுவாக கொசுக்கள் வலுவான நறுமணம் உள்ள தாவரங்களை விட்டு விலகியே இருக்கும். எனவே, கொசுக்கள் வருவதை தடுக்க உங்கள் தோட்டத்திலோ அல்லது பால்கனியிலோ எலுமிச்சை, புதினா, சாமந்தி அல்லது ரோஸ்மேரி போன்ற நறுமணம் மிக்க தாவரங்களை வளர்க்கவும்.
கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்
மாலை நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இவ்வேளையில் கொசுக்கள் வீட்டின் இருண்ட மூலைகளில் நுழைந்து மறைந்துவிடும்.
இயற்கை தீர்வு
இரசாயனங்களைக் கொண்ட தயாரிக்கப்படும் கொசு விரட்டிகள் ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக ஒரு இயற்கையான கொசு விரட்டியை நீங்கள் சுலபமாக வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த முடியும். இதற்கு சில துளி டீ ட்ரீ எண்ணெயை தண்ணீருடன் கலந்து உடலில் பூசி கொள்ளலாம். தேவைப்பட்டால் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றியும் பயன்படுத்தலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொசுக்களிடம் இருந்து உங்களை பாதுகாக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation