இலவங்கப்பட்டை டீயில் நம்மை வசீகரிக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. தினமும் ஒரு கப் இலவங்கப்பட்டை டீ உட்கொள்வதால் உங்கள் உடல் பூஞ்சை தொற்றில் இருந்தும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்தும் மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோயிலிருந்தும் பாதுகாக்கப்படும்.
நீங்கள் குடிக்கும் உங்கள் அன்றாட டீயில் சரியான பொருட்களைச் சேர்த்து குடிக்கும் போது அது ஆரோக்கியத்தை கொடுப்பதாக இருக்கும். இன்று, இலவங்கப்பட்டை டீ பற்றி பேச போகிறோம். டால்சினி என்றும் அழைக்கப்படும் இலவங்கப்பட்டை பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வாசனை தரும் மசாலா பொருளாகும். இந்த முக்கிய மசாலா பொருளின் நன்மைகளை அனுபவிப்பதற்கான ஒரு சிறந்த வழி தான் இலவங்கப்பட்டை டீ.
இதுவும் உதவலாம்:கோடை காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேதிக் டயட் டிப்ஸ்
நீங்கள் பால் சேர்க்காமல் டீ சாப்பிட விரும்பினால், அதற்கு ஒரு கப் எடுத்து அதில் இலவங்கப்பட்டை சேர்க்கவும். அடுத்து, ஒரு கப் கொதிக்கும் நீரை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும். பிறகு இலவங்கப்பட்டையை அகற்றி விடலாம், இலவங்கப்பட்டை சாறு அதில் இறங்கி இருக்கும். இப்போது அந்த நீரில் தேநீர்ப்பையைச் சேர்த்து பருகி மகிழுங்கள்!
பொதுவான பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட இலவங்கப்பட்டை ஒரு சிறந்த மூலப்பொருளாக இருக்கிறது. இது உடலில் நோய்களை உண்டாக்கும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் எந்த விதமான உடல்நலப் பிரச்சினைகளையும் போக்குகிறது.
இலவங்கப்பட்டை டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன, மேலும் இவை புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கும். இந்த டீ உங்களுக்கு தீங்கினை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கு பலத்தை சேர்க்கிறது.
புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களையும் அழிக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. இது உடலில் உருவாகும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவாகும், எனவே இலவங்கப்பட்டையை நீங்கள் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என்பது அவசியம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவுகிறது. இது இயற்கை நமக்களித்த ஒரு தீர்வாகக் கூறப்படுகிறது. இது உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உடலில் குளுக்கோஸ் உட்கொள்ளும் அளவையும் குறைக்கிறது.
உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை குறிக்கும், உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருப்பதையும் குறிக்கிறது. இதய நோய்கள் வராமல் இருக்க கொலஸ்ட்ரால் அளவு சரியான படி இருக்க வேண்டியது அவசியம். இலவங்கப்பட்டையை உட்கொள்வதால் இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உடல் எடையை குறைப்பதற்கு இலவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இலவங்கப்பட்டை டீ உடல் எடை குறைக்க உதவுகிறது. இருப்பினும், இந்த பானத்தை அதிகமாக உட்கொண்டால் உங்களுக்கு அது ஆபத்தாக மாறலாம், ஏனெனில் இதில் அதிக அளவு கூமரின் உள்ளது, இது கல்லீரலில் இரத்தப்போக்கை உருவாக்கும் அல்லது கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்.
மாதவிடாய் வலிகளை குறைக்க இலவங்கப்பட்டை தேநீர் அருந்துவது ஒரு எளிய வழி. இந்த தேநீரை குடிப்பதால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
இதுவும் உதவலாம்:ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் சிறந்த சாறு எது தெரியுமா?
இலவங்கப்பட்டை சருமத்திற்கும் சிறந்தது என்று நம்பப்படுகிறது. இது சருமத்தில் கொலாஜன் உருவாவக்கத்தை தூண்ட உதவுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேலும் மேம்படுத்தி, உங்கள் சருமத்தை இளமையாகக் காண்பிக்கும். ஒரு ஆய்வின் படி, இலவங்கப்பட்டை முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் எதிர்த்துப் போராடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]