நாள் முழுவதும் கோடை வெயிலில் அலைந்து திரிந்து வீடு திரும்பி நிம்மதியாக தூங்கலாம் என பார்த்தால் புழுக்கமாக இருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாவீர்கள். வீட்டை குளுமையாக மாற்றுவது மட்டும் நிம்மதியான தூக்கத்திற்கு பலன் அளிக்காது. வாழ்க்கை முறையிலும் நாம் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஏழு விஷயங்களை நீங்கள் பின்பற்ற ஆரம்பித்தால் இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
தூங்குவதற்கு முன் கனமான உணவை உட்கொள்வது உடல் அசௌகரியம் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். இதனால் உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக எளிதில் ஜீரணிக்கக்கூடிய இலகுவான உணவு வகைகளை தேர்ந்தெடுக்கவும். உங்கள் உடல் உணவை சரியாக ஜீரணிக்க போதுமான நேரம் கொடுக்க வேண்டும். எனவே படுக்கைக்கு செல்லும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
காஃபின் உங்களை இரவில் விழித்திருக்க வைக்கும். இது டீ, காபி, சாக்லேட் மற்றும் சில குளிர்பானங்களில் காணப்படுகிறது. காஃபின் உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காது என்பதை உறுதிப்படுத்த தூங்கும் ஆறு மணி நேரத்திற்கு முன்பாக மேற்கண்ட பானங்களை குடிக்க வேண்டாம். நீங்கள் இரவு பத்து மணிக்கு தூங்கும் நபராக இருந்தால் மாலை நான்கு மணி அளவில் காபி, டீ குடித்துவிடுங்கள்.
உடலில் நீரிழப்பு தூக்கக் கலக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பது முக்கியம். நிறைய தண்ணீர் குடியுங்கள் மற்றும் கூல் டிரிங்க்ஸ், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் இது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து தூக்கத்தை சீர்குலைக்கும்.
மேலும் படிங்க உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுங்க! உடலுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்
தொடக்கத்தில் மது குடித்தவுடன் போதையினால் நல்ல தூக்கம் வருவது போன்ற தோன்றும். ஆனால் நாளடைவில் அது தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். தூக்கத்தில் நடப்பது, அடிக்கடி கனவு காண்பது என பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் குடிகாரராக இருந்தால் மது அருந்துவதை கட்டுப்படுத்தவும் அல்லது படுக்கைக்கு செல்லும் முன் குடிப்பதை தவிர்க்கவும்.
சில உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும். இதில் வாழைப்பழம், செர்ரி, கிவி, பாதாம் மற்றும் வால்நட் ஆகியவை அடங்கும். உங்களின் தூக்க தரத்தை மேம்படுத்த இவற்றை உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
காரமான உணவுகள் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இது தூக்கத்தை கடினமாக்கும். தூக்கத்தில் தொந்தரவு ஏற்படாமல் இருக்க காரமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]