Pregnancy Tips in Tamil: இயற்கை முறையில் விரைவில் கர்ப்பமடைய வேண்டுமா?

நீங்கள் இயற்கையான முறையில் கருத்தரிக்க வேண்டுமா? இதற்கான வழிகளை நிபுணரிடம் இருந்து தெரிந்துகொள்வோம்.

conceive faster tip

பெண்மைக்கு மட்டுமே கிடைத்த பரிசு தாய்மை. ஒரு சிலருக்கு இந்த பரிசு திருமணம் ஆன சில மாதங்களிலேயே கிடைக்கலாம், ஒரு சிலருக்கு சற்று தாமதமாக கிடைக்கலாம். தாமதமாக கிடைக்கிறதே என்று வருத்தம் கொள்ளாதீர்கள். ஏனெனில் தாமதம் ஆனாலும் கிடைக்கப்போகும் பரிசு விலைமதிப்பற்றதாக இருக்கும். வாழ்வில் இந்த தருணத்திற்காக காத்திருப்பது மிகவும் கடினம் தான், ஆனால் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

கர்ப்பம் தரிப்பதற்கு உடல் உறவை தாண்டி பல முக்கியமான விஷயங்களும் அவசியமாகிறது. கர்ப்பத்திற்கான சரியான சூழலை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

விரைவில் கருத்தரிப்பதற்கு சரியான வாழ்க்கை முறை, உணவு போன்ற விஷயங்களும் அவசியம். இதை பற்றிய சில முக்கியமான குறிப்புகளை ஆரஞ்சு கிளினிக்கின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கரிமா ஸ்ரீவஸ்தவா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய குறிப்புகளை இப்பதிவில் படித்தறியலாம். தாயாக முயற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்கவும்

அதிக உடல் எடையுடன் இருப்பதால் கருவுறுதல் பாதிக்கப்படலாம். இது கர்ப்ப காலத்தில் பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். அதிக எடை அல்லது உடல் பருமனால் அவதிப்படும் பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் உடல் எடையை சரியாக பராமரிப்பதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

வளமான நாட்களில் உடல் உறவு வைத்துக்கொள்ளவும்

planning for pregnancy

ஒவ்வொரு மாதமும் ஓவுலேஷன் நாள் அன்று கருப்பையில் இருந்து கருமுட்டைகள் வெளியேறும். இந்நாளை மாதவிடாய் தொடங்கிய முதல் நாளில் இருந்து கணக்கிட வேண்டும். பொதுவாக 28-30 நாள் மாதவிடாய் சுழற்சி உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் 14 அல்லது 15 ஆவது நாளில் ஓவுலேஷன் நடைபெறும். ஓவுலேஷனுக்கு முன்னதாக 5 நாட்களும், ஓவுலேஷனுக்கு பின் ஒரு நாளும் வளமான நாட்கள் ஆகும். கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவர்கள் ஓவுலேஷன் நடந்தேறும் இந்த வாரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். கருமுட்டை வெளியேறும் நாளில் உடலுறவு வைத்துக்கொள்வதை விட, எல்லா வளமான நாட்களிலும் உடல் உறவு வைத்துக்கொள்வது கரு தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

உடலுறவுக்கு பின் 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்

planning for pregnancy

உடல் உறவுக்கு பின் சிறுது நேரம் ஓய்வெடுப்பது கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக மகப்பேறு மருத்துவர் டாக்டர் கரிமா அவர்கள் கூறியுள்ளார். உடல் உறவுக்கு பின் உடனே குளிப்பது அல்லது கழிவறைக்கு செல்வது போன்ற செயல்களால் விந்தணுக்கள் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் 10 நிமிடங்கள் ஓய்வெடுப்பதன் மூலம் விந்தணுக்கள் சரியான திசையில் செல்வதற்க்கும், கருத்தரிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஃபி ஆபத்தானதா?

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்

planning for pregnancy

உங்கள் கணவருக்கு புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இருந்தால், அவை விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை பாதிக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே இது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் அதிகமாகம்.

கர்ப்பம் தரிக்க வேண்டும் என்ற சிந்தனை அதிகரிக்கும் போது மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இது உங்கள் கருவுறுதலை மேலும் தாமதிக்கும். பலன்களை எதிர்பாராமல் சமசீரான உணவு, சரியான உடல் எடை, ஆரோக்கியமான வாழக்கை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். மருத்துவர் ஆலோசனையுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: விரைவில் கருத்தரிக்கவும் கர்பப்பையை பலமாக்கவும் உதவும் உணவுகள்

தாயாகும் கனவோடு இப்பதிவை படிக்க வந்த உங்கள் அனைவரின் கனவும் விரைவில் நிஜமாக வாழ்த்துக்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP