பெண்களின் இனப்பெருக்க மண்டலத்திற்கு ஆதாரமே கர்பப்பை தான். நம் வாழ்வின் முக்கிய பங்களிப்பை கர்பப்பை தருகிறது. கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கர்பப்பையை ஆரோக்கியத்திற்கு பலப்படுத்த கூடிய சில உணவுகளை நாம் இங்கு காணலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறும். ஒரு நாளைக்கு 2 - 3 முறை உங்கள் வயிறு சுத்தமாகிறது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். அப்போது தான் வயிறு வலிமையாக இருக்கும். இதை தாண்டி, நம் உடலில் அளவுக்கு அதிகமான ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றுவதும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள். இதனால் கர்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பீன்ஸ், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் வகைகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும்.
இதுவும் உதவலாம்:தைராய்டை சீராக்க மஞ்சள் போதும்
நீங்கள் முடிந்தவரை இயற்கை உணவுகளை உண்பது நல்லது. இந்த உணவுகள் வேதி பொருட்கள் இல்லாமல், பூச்சி மருந்து கலக்காமல் இருக்கிறது. தேவையில்லாத வேதி பொருட்கள் உங்களை கர்ப்பம் அடைய விடாமல் தடுக்கும். மேலும் நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்ட பின்பு 8 - 10 கப் தண்ணீர் குடித்தால் உணவுகள் நன்கு ஜீரணமாக்கி செரிமான மண்டலத்தில் எளிமையாக நகர்ந்து செல்லும்.
கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்களின் உறைவிடமாக இருப்பது தான் காய்கறிகள். இத்தகைய சத்து நிறைந்த காய்கறிகளை உண்பதால் நீர்க்கட்டிகள் உருவாவதை தவிர்க்கலாம். காய்கறிகள் நீர்க்கட்டிகள் பெருகும் தன்மையை மெதுவாக செயல்பட வைக்கிறது. குறிப்பாக பருப்புகள், முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி இதில் அடங்கும். ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் காய்கறிகளில் அதிகம் உள்ளது. உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் உடன் ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் எதிர்த்து போராடி உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை குறைத்து கர்பப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளை தடுக்கிறது.
வைட்டமின் C மற்றும் பையோ ஃப்ளேவனாயிட்ஸ் ஆகியவை பழங்களில் அதிக அளவில் இருக்கிறது. இவை நீர்க்கட்டிகள் வளர்ச்சியின் தன்மையை தடுக்கும். இதனால் ஈஸ்ட்ரோஜன் அளவு சாதாரணமாக இருக்கும். எனவே தினமும் பழங்கள் சாப்பிட கர்பப்பையில் நீர்க்கட்டிகள் வளராமல் இருக்கும். பையோ ஃப்ளேவனாயிட்ஸ் சினை பை கேன்சரை தடுத்து, கர்பப்பையை திடமாக வைக்கும். ஒவ்வொரு உணவுக்கும் உள்ள இடைவேளையில் பழங்கள் சாப்பிட்டால், சிறு தீனிகள் சாப்பிட பிடிக்காது. இதனால் உடலுக்கு நல்ல சத்துக்கள் மட்டுமே கிடைத்து கர்பப்பையை பலமானதாக்கும்.
பால், தயிர், பன்னீர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை சாப்பிவது கர்பப்பைக்கு நல்லது. இந்த பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் D சத்து அதிகம் உள்ளது. கால்சியம் சத்து எலும்புகளை பலமாக்கும். வைட்டமின் டி சத்து கர்ப்பப்பை கட்டிகள் வராமலேயே செய்து விடும். இதை தாண்டி, கால்சியத்தை உறிஞ்ச வைட்டமின் D சத்து அதிகம் தேவைப்படுகிறது.
எலுமிச்சையில் வைட்டமின் C சத்து உள்ளது. இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி விடும். வைட்டமின்கள் கர்பப்பையின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கர்ப்பப்பையில் உள்ள பாக்டீரியா கிருமிகளை வெளியேற்றும். இதனால் தொற்று ஏற்படாமல் போகும். தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க, கர்ப்பப்பை பலமாகும்
இதை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறுவயதில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது எல்லாம், நம் அம்மா இந்த எண்ணெயை ஒரு ஸ்பூன் குடிக்க சொல்லி வற்புறுத்துவார் குடலை சுத்தம் செய்வதற்காக, அதே போல விளக்கெண்ணெய் சினை முட்டை கட்டிகள் மற்றும் கருப்பை நீர்க்கட்டிகள் ஆகியவற்றை போக்கும். இத்துடன் விளக்கெண்ணெயில் இருக்கும் ரோகோனோலிக் அமிலம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் கருப்பைக்குள் எந்த தொற்று கிருமியும் நுழையாது.
இதுவும் உதவலாம்:பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய 5 வழிகள்
இதில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான கர்ப்பபைக்கு மட்டும் அல்ல, நீர்க்கட்டிகள் இல்லாத கர்ப்பப்பையை உருவாக்கவும் சிறந்தது மூலிகை மருத்துவர்களை பொறுத்தவரை கருப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் கிரீன் டீயை கிட்டத்தட்ட 8 வாரங்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் அதிக அளவில் குறைந்து விடும்.
எனவே உங்கள் கர்பப்பை திடமாக இருக்க வேண்டும் என்றால், இந்த உணவுகளை இன்றே உங்கள் உணவு பட்டியலில் சேருங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]