How to Use Turmeric for Thyroid Problem in Tamil: தைராய்டை சீராக்க மஞ்சள் போதும்

மஞ்சள் உணவுக்கு நிறம் மற்றும் சுவையை மட்டும் கொடுப்பது அல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். 

 
turmeric for thyroid

மஞ்சள் அனைவரின் சமையலறையிலும் இருக்கும் பொருள். இதன் நன்மைகளின் அளவிற்கு எல்லையே இல்லை. ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் மட்டுமல்லாமல் மஞ்சளை உட்கொண்டு வந்தால், பல வியாதிகளை எதிர்த்து போராட முடியும்.

தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாமல் இருந்தால், மாத்திரைகள் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டி இருக்கும். எனவே இந்த மருந்துகளுடன், மஞ்சளை சேர்த்து எடுத்து கொள்ள, கூடுதல் பலன்கள் கிடைக்கும். எனவே மத்திய அரசின், ESIC மருத்தவமனையின் உணவு நிபுணர் ரிது பூரி அவர்கள் மஞ்சள் பற்றிய தகவல்களையும் தைராய்டு நோயாளிகளுக்கு அது எப்படி நன்மை செய்கிறது என்ற தகவலையும் நமக்கு வழங்குகிறார்.

turmeric for thyroid in tamil

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்

மஞ்சள் செடி மற்றும் வேரின் முக்கிய பலன் என்னவென்றால் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். சில ஆட்டோ இம்யூன் வியாதிகளில் தைராய்டும் ஒன்று. தன் உடலே தன் சொந்த அங்கங்களை பாதிக்கும். இவ்வாறு நடக்கும் போது, உடல் தன் சாதாரண செயலை செய்வதை நிறுத்தி விடும். ஆனால் உணவில் மஞ்சள் சேர்க்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி நன்கு செயல்படும். இதனால் ஒருவர் ஆட்டோ இம்யூன் நோயிலிருந்து தப்பிக்கலாம். மேலும் மஞ்சளில் உள்ள குர்குமின் எனப்படும் இயற்கை பாலிஃபீனாலிக் கலவையானது தைராய்டு பிரச்சினைக்கு தீர்வு தரும்.

குர்குமின் நன்மைகள்

இது ஒரு இயற்கை பாலிஃபீனாலிக் கலவை. மஞ்சளில் உள்ள இந்த கலவை ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. மேலும் இது பல மூலிகைக்கு பயன்படுகிறது. ஆனால் சில ஆய்வுகள்படி மஞ்சளில் இருக்கும் குர்குமின் தைராய்டு கேன்சரை மோசமான நிலைக்கு கொண்டு செல்லாமல் தடுக்கிறது. இந்த ஆய்வை பொறுத்தவரை, தைராய்டு நோயாளிகளுக்கு உண்டாகும் தைராய்டு கேன்சர் செல்கள் பரவாமல் இது காக்கிறது. கட்டிகள் பரவாமல் பாதுகாக்கிறது. இதனால் அந்த கேன்சர் நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாகாமல் காப்பாற்றுகிறது. எனவே மனதில் கொள்ளுங்கள்,தைராய்டு நோயாளிகள் மஞ்சள் சாப்பிட தொடங்கினால், அவர்களால் அதை நிறுத்தவே முடியாத அளவிற்கு நன்மைகளை செய்யும்.

turmeric for thyroid in tamil

அறிவாற்றல் சிறப்பாகும்

ஒருவர் ஹைபோ தைராய்டிசம் வியாதியால் சிரமப்படும் போது, அவருக்கு ஞாபக மறதி மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிக்கும். குறிப்பாக, உங்களுக்கு நீண்ட நாட்களாக தைராய்டு பிரச்சினை இருந்திருந்தால், உங்கள் ஞாபக சக்தி மிகவும் மோசமாக பாதிக்கும். எனவே நீங்கள் மஞ்சள் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சினை மட்டுமல்ல, அது சம்பந்தமான மறதி போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். இதில் இருக்கும் குர்குமின், நரம்பு மண்டலத்தை தூண்டி மூளையின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும்.

வீக்கத்தை குறைக்கும்

நாம் அன்றாடம் வெவ்வேறு விதமான உலோக நச்சுகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இது நம் ஹார்மோன்களை பாதித்து, நமது தைராய்டு சுரப்பியில் வீக்கத்தை உண்டாக்குகிறது. இதை தடுக்கும் ஒரே சிறந்த வழி நாம் மஞ்சளை அடிக்கடி உட்கொண்டு வருவது தான். இது ஹார்மோனை சரியான நிலைப்பாட்டில் வைத்து, தைராய்டு வீக்கத்தை குறைப்பதோடு மட்டும் நில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களை வேகமாக அழிக்க உதவுகிறது.

turmeric for thyroid in tamil

மஞ்சள் உட்கொள்வது தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை உண்டாக்கும் என்றாலும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் முன் ஒரு உணவுக்கலை நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள். சில சமயம் தொடர்ந்து மஞ்சள் உண்பது உடலுக்கு தீங்குகளையும் ஏற்படுத்தும்.

இதுவும் உதவலாம்:நோயின்றி வாழ இந்த 15 குறிப்புகளை பின்பற்றலாமே

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP