15 Tips For A Healthy Life in Tamil: நோயின்றி வாழ இந்த 15 குறிப்புகளை பின்பற்றலாமே

நோய்வாய்ப்படுவதை தவிர்க்க வேண்டுமா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள 15 குறிப்புகளை பின்பற்றி பலன் பெறலாம்.

 
disease will stay away trick

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் நோய் இன்றி வாழலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தன் மூலம் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கலாம். இதன் மூலம் சர்க்கரை நோய், இருதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகிறது.

ஆரோக்கியமான விஷயங்களை தேர்வு செய்வது எளிதானது அல்ல. ஏனெனில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாறுதல்களுக்கு தொடர்ந்து நிலையாக முயற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்குவதில் தொடங்கி, ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது வரை திட்டமிட்டு செயல்படுத்துவது உங்களுக்கு ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம்.

இருப்பினும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கான பலனை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கலாம். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 15 குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்

ஆரோக்கியமாக இருக்க 15 வழிகள்

  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளவும், அடுத்த வேளையில் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் இடைப்பட்ட உணவுகளை ஸ்னாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில் தயிர், முளைகட்டிய பயிறு, சாலட், தேங்காய் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
prevention methods
  • வெறுங்காலுடன் புல் மீது நடக்கலாம். இவ்வாறு நடப்பது கண்பார்வையை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைப் போக்கவும், அழற்சியை குறைக்கவும் உதவுகிறது.
  • நல்ல கொழுப்புகள் உள்ள பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை திடீரெனே உயரும் இன்சுலின் அளவை குறைத்து, நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
  • உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளல் அளவை அதிகரிக்க பச்சை காய்கறிகளை சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும். பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படும் வைட்டமின் K பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது இரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும், இதயப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும், வயது முதிர்வால் ஏற்படும் எலும்பு பாதிப்புகளை தடுக்கவும் உதவுகிறது.
  • பருப்பு, சாதம் போன்ற உணவுகளில் சுத்தமான பசு நெய் சேர்த்துக் கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
prevention method
  • வீட்டில் சமைக்கும் போது, உங்கள் 5 புலன்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உணவின் சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
  • உணவை கைகளால் சாப்பிடுவது நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்க உதவுகிறது.
  • வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், PCOS, IBS(மலக்குடல் எரிச்சல் நோய்) போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
  • உணவின் கலோரி, அதிகரிக்கும் உடல் எடை பற்றி கவலைப்படாமல் உணவை ருசித்து சாப்பிடுங்கள். வாழக்கையை ரசித்து வாழுங்கள்.
  • ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் விட அதிகமான அளவு உப்பு எடுத்துக்கொள்ள கூடாது. சமைக்கும் போதும் குறைவான அளவு உப்பு சேர்ப்பதை உறுதிப்படுத்திகொள்ளவும். மேலும் சோடியம் அதிகம் உள்ள சோயா சாஸையும் அளவோடு பயன்படுத்துவது நல்லது. உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை தவிர்ப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தையும் குறைக்கலாம்.
prevention method
  • நமது உடல் 80% நீரால் ஆனது. மலச்சிக்கலை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தண்ணீர் அவசியமானது. எனவே ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்களாவது அல்லது வாரத்தின் 5 நாட்களில் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கவும். உங்களை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்க நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் அல்லது ஏதேனும் உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்யலாம்.
  • தூக்கத்திற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வலுவாக வைத்திருக்க 7 முதல் 9 மணிநேரம் தூக்கம் அவசியமானது.

இந்த பதிவும் உதவலாம்: அதிகாலையில் சீக்கிரம் எழ 10 சூப்பர் டிப்ஸ்

  • கடும் வெயிலில் நீண்ட நேரம் வெளிப்படுவது தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்கிரீன் மற்றும் நீண்ட கை உள்ள ஆடைகளை பயன்படுத்தலாம்.
  • உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யவும். மேலும் தொற்று பரவலை தடுக்க ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைஸர் பயன்படுத்தலாம்.
  • நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற கலோரி உடைய உணவை சாப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் உண்ணும் உணவு நீங்கள் செய்யும் வேலைக்கான ஆற்றலாக மாறிவிடும். இதனால் கொழுப்பும் உடம்பில் சேராது. உடல் செயல்பாடுகள் குறைவாக இருக்கும் வேலையில் அதற்கு தகுந்த கலோரி உடைய உணவை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியத்தையும் அழகையும் அள்ளி தரும் நெல்லிக்காய் !

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP