குளிர் காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், இதனால் பல விதமான வியாதிகள் நம்மை எளிதில் சூழும். அதனால் தினசரி ஒரு நெல்லிக்காய் உட்கொள்வது சிறந்த தீர்வு. நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 8 மடங்கு அதிகமான வைட்டமின் C சத்து உள்ளது. மாதுளையை விட 17 மடங்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.
நெல்லிக்காய் நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் நம் சருமம் மற்றும் முடிக்கு மிகவும் நன்மை அளிக்க கூடியது. இதனை குளிர் காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய உடல் ஆரோக்கியம் வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த நெல்லிக்கனியின் சுவை பிடிக்காமல் போகிறது, அதனால் இயற்கை நமக்களித்த இந்த வரப்பிரசாதத்தை உண்ணாமல் தவிர்க்கின்றனர்.
இதுவும் உதவலாம்:உடல் எடையைக் குறைக்க பப்பாளி எப்படி உதவுகிறது தெரியுமா?
இது போன்றவர்களுக்கு நெல்லிக்காயை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு புதிய வழியை நாங்கள் சொல்கிறோம். ஆயுர்வேத நிபுணர், டாக்டர். தீக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பற்றி பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
நெல்லிக்காயில் 5 சுவைகள் இருக்கின்றன. இதில் அறுசுவைகளில் உள்ள உப்பு சுவையை தவிர மற்ற அனைத்து சுவைகளும் நிறைந்தது. ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை சமச்சீரான உணவு என்பது அறுசுவைகள் கொண்டது. நெல்லியின் உப்பு சுவை இல்லாததால் அதை பதப்படுத்தும் போது அதில் உப்பின் சுவையும் கலந்து விடும். இதில் அறுசுவைகள் கலந்து சமச்சீர் உணவாகி விடுகிறது.
இதுவும் உதவலாம்:குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்
தண்ணீர் - 1 கப்
மஞ்சள் - 1 சிட்டிகை
உப்பு - 1 ஸ்பூன்
நெல்லிக்காய் - 10
முதலில் நெல்லிக்காயை கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். பின் அதில் சிறு சிறு ஓட்டைகள் போடவும். மஞ்சள் தூள், உப்பு மற்றும் நெல்லிக்காயை 3-4 நாட்கள் நீரில் ஊற விடவும். இது இப்போது சாப்பிட தயாராகி விட்டது.
ஒரு நாளைக்கு ஒரு பதப்படுத்திய நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்ய உங்கள் பிரச்சினைகள் காணாமல் போய் விடும்.
எச்சரிக்கை: உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் அல்லது நெல்லிக்காய் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் பட்சத்தில் அதை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]