குளிர்காலத்தில் அதிகம் சாப்பிடப்படும் பழங்களில் பேரிச்சம் பழமும் ஒன்று. இது உடலை உஷ்ணமாக வைத்திருக்கும் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் உள்ள சத்துக்கள், உடலுக்கு பல வழிகளில் நன்மை தருகின்றன. தினமும் 5 முதல் 6 பேரிச்சம் பழம் வரை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் சர்க்கரை இருப்பதால், அதிகமாக சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நியூட்ரில்டுவின் நிறுவனர் டாக்டர் இட்டு சாப்ரா அவர்களின் கூற்றுப்படி, 'தினமும் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தில் பல நல்ல விளைவுகளைக் காணலாம். நீங்கள் இனிப்பு பிரியராக இருந்தால், பேரீச்சம் பழம் அந்த ஆசையைக் குறைக்கும்’. இவை உலர்ந்து இருப்பதால், இவற்றின் கலோரி உள்ளடக்கம் பெரும்பாலான பிரெஷ்ஷான பழங்களைவிட அதிகமாக இருக்கும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள பெரும்பாலான கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்கின்றன. மீதமுள்ள சில கலோரிகள் புரதத்திலிருந்து கிடைக்கின்றன. பேரீச்சம்பழத்தில் கலோரிகள் இருந்தாலும், இதில் குறிப்பிடத் தக்க அளவு நார்ச்சத்து, சில முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன.
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பேரிச்சம் பழம், பல்வேறு ஆன்டி ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது. இவை உங்கள் செல்களை பல நோய்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கின்றன. மெட்ஜூல் பேரிச்சம் பழம் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் தாவர கூறுகளின் சிறந்த ஆதாரமாகும். இவை உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனுடன், பேரீச்சம் பழம் உட்கொள்வது DNA பாதிப்பையும் தடுக்க உதவுகிறது.
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்திற்கு நன்மை தரும். இது வழக்கமான குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. உடற்பயிற்சிக்கு முன் பேரீச்சம் பழம் சாப்பிடுவது உங்கள் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தினால் முழுமையாகச் சாப்பிட்ட உணர்வு உங்களுக்கு இருக்கும். மேலும் நீண்ட நேரத்திற்கு பசிக்காது.
பேரிச்சம் பழம் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதை சாப்பிடுவதால் உங்கள் நினைவாற்றல் நன்றாக இருக்கும், இதன் மூலம் உங்கள் அறிவு திறனும் சிறப்பாக இருக்கும். அழற்சியை குறைப்பதற்கும், மூளையில் இரத்த உறைக்கட்டி கட்டமைத்தலை தடுப்பதற்கும் பேரிச்சம் பழங்கள் உதவியாக இருக்கும். இது நினைவாற்றலிழப்பு நோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் பல கண் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
மக்னீசியம் நிறைந்த பேரீச்சம் பழம் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகும். இதனை உட்கொள்வது மனப்பதற்ற நோய்கள் தொடர்பான அறிகுறிகளை குறைக்கிறது.மேலும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்த உதவுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பேரிச்சம் பழங்கள் குறைந்த GI குறியீட்டைக் கொண்டுள்ளன, அதாவது அவை உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்காது. இந்தக் காரணத்தினால், இது சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதுகாப்பானது. மேலும் சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்தால் இந்த 5 நன்மைகளையும் பெறலாம்
செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிட்ட உடனே பேரீச்சம் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினமாக்குகிறது. இதனால் வயிறு உப்புசம் ஏற்படலாம்.
நீங்களும் தினமும் 2 பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை ஆலோசித்தபின் இதைப் பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு 1 பல் பூண்டு போதும்!!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]