ஆரோக்கியமாக இருக்க அனைவரும் பழங்கள் சாப்பிடும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். நாம் எல்லோரும் பருவகால பழங்களை சாப்பிடுகிறோம், ஆனால் பப்பாளி ஆண்டு முழுவதும் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். எல்லா பருவகாலங்களிலும் பப்பாளி சாப்பிடலாம். பொதுவாக, பலரும் தங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த பப்பாளி சாப்பிடுவார்கள்.
இது தவிர, பப்பாளியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன. இது சருமம் மற்றும் இதயத்திற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் பப்பாளி உங்கள் உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று, இந்த பதிவில், மத்திய அரசு மருத்துவமனையான ESIC மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ரிது பூரி அவர்கள், உடல் எடையைக் குறைக்க ஏன் பப்பாளி சாப்பிட வேண்டும் என்பதை நமக்காக விளக்குகிறார்.
அதிக நார்ச்சத்து உள்ளது
உடல்எடை குறைப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுமுறை பட்டியலில் பப்பாளியும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதாவது, நீங்கள் இதை சாப்பிடும்போது, நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். இது உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது.
குறைந்த கலோரி உள்ளது
உடல் எடை குறைப்பதற்கான உணவுமுறையை பின்பற்றும் பொது, கலோரி அளவையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் பப்பாளி சாப்பிடுவது நல்லதாகக் கருதப்படுகிறது. பொதுவாகப் பழங்களில் கலோரி எண்ணிக்கை குறைவாகவே இருக்கும், இருப்பினும் மற்ற பழங்களைவிடப் பப்பாளியில் குறைந்த அளவு கலோரி எண்ணிக்கை உள்ளது. ஒரு கப் பப்பாளி சாப்பிட்டால் சுமார் 62 கலோரிகள் வரை கிடைக்கும். இதன் மூலம், உங்கள் கலோரி எண்ணிக்கை அதிகமாகாமல் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: காலையில் இந்த 6 விஷயங்களை மட்டும் செய்தால் போதும், உடல் எடை மிக வேகமாகக் குறையும் தெரியுமா!
குறைவான சர்க்கரை அளவு உள்ளது
பப்பாளியில் இயற்கை சர்க்கரையின் உள்ளடக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த காரணத்தினால் உடல் எடை குறைக்கும் உணவுமுறையில் இதை அடிக்கடி சேர்க்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், செயற்கை சர்க்கரை மட்டுமின்றி, இயற்கை சர்க்கரை அளவையும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
பல முக்கியமான வைட்டமின்கள் உள்ளன
பப்பாளியில் வைட்டமின் A, வைட்டமின் E உட்பட பல வைட்டமின்கள் உள்ளன. இதில் உள்ள அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. இது மட்டுமின்றி, இவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் தண்ணீரால் கிடைக்கும் பலன்கள்!!!
வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது
உடல் எடை குறைக்க, உங்கள் வளர்சிதை மாற்றம் சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம். உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருந்தால், உடல் எடையைக் குறைக்க நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும். பப்பாளி சாப்பிடுவதால் உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுவதோடு, வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை குறைப்பது எளிதாகிவிடுகிறது.
இதை கவனித்துக்கொள்ளுங்கள்
பப்பாளி சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது என்றாலும், அதை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, உங்களுக்கு ஏற்ற சரியான அளவு பப்பாளியை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation