அதிக எடை அல்லது உடல் பருமன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.உடல் எடையை குறைப்பதற்காகப் பல பொருட்கள் மார்க்கெட்டில் கிடைத்தாலும், சீரான வாழ்க்கை முறையும், ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவையும் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் எடை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்.
அதிக உடல் எடையினால் உயர் இரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை, இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளைக் காலையில் பின்பற்றுவதன் மூலம், உங்கள் எடை மற்றும் தொப்பையை வேகமாகக் குறைக்கலாம்.
எடை இழப்பு தொடர்பான தகவலை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் திக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பது , "ஹார்மோன் சமநிலையின்மை, மோசமான வளர்சிதை மாற்றம், மரபியல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?” சரி, காரணம் எதுவாக இருந்தாலும், காலையில் இந்த 6 விஷயங்களைச் செய்வதன் மூலம் உடல் எடையை மிக வேகமாகவும், எளிமையாகவும் குறைக்கலாம் என்கிறார்.
நீங்களும் விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்பினால், இந்த பதிவில் சொல்லப்படுள்ள நிபுணர்களின் குறிப்புகளைக் முயற்சி செய்து பார்க்கலாம்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஹார்மோன் சமநிலை அடைவதோடு, வளர்சிதை மாற்றமும் சீராகி உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கிறது. இது மன ஆரோக்கியம், தூக்கம், செரிமானம் போன்றவற்றை மேம்படுத்தித் தொப்பையை எளிதில் குறைக்க உதவுகிறது. மேலும், மிகவிரைவாக எடை குறைப்பதற்கு ஏற்றது இந்தச் சூரிய நமஸ்காரம்.
இது இரத்த ஓட்டம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், நச்சுத்தன்மையை உடனடியாக வெளியேற்றி, வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அதோடு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்தி, ரத்தபோக்கை சீராக்கி, PMS என குறிப்பிடப்படும் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் இருக்கக்கூடிய அறிகுறிகளைச் சமாளிக்கவும் உதவுகிறது.
இடைப்பட்ட விரதம் என்பது சில மணி நேரங்கள் விரதம் இருந்து, உங்கள் உடலுக்கு ஏற்ற உணவைச் சாப்பிடுவதாகும். சர்க்காடியன் விரதம் என்பது மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீங்கள் சாப்பிடுவதை நிறுத்துவதாகும். எனவே இந்த விரதத்தில் காலையிலிருந்து 8 மணிநேரம் சாப்பிடலாம், சூரிய அஸ்தமனத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 1 மணி நேரத்திற்குள் உங்கள் கடைசி உணவை முடித்துக் கொள்ளலாம். இதில் இரவு 8 மணிக்குள் இரவு உணவைச் சாப்பிட வேண்டியது அவசியம்.
உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, வயிற்று பகுதி மட்டுமின்றி மற்ற பகுதிகளிலிருந்து கொழுப்பைக் கரைக்கவும் சூடான நீர் உதவுகிறது. இது தவிர, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, அடிக்கடி பசி எடுத்தல் மற்றும் எப்பொழுதும் வயிறு கனமாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் அமைகிறது.
நீங்கள் எவ்வளவு நன்றாகத் தூங்குகிறீர்களோ, அவ்வளவு விரைவில் உங்கள் எடை குறையும். 7-8 மணி நேர நல்ல தூக்கம் கல்லீரலில் நச்சுகள் சேராமல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து, உடல் எடையைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க இந்த ஸ்பெஷல் டீயை முயற்சி செய்யலாம்.
இந்தக் குறிப்புகள் மூலம் நீங்களும் விரைவாக உடல் எடையைக் குறைக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]