காலையில் சீக்கிரம் எழுவது பல வழிகளில் நன்மை பயக்கிறது. அன்றைய நாளன்று செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிதுவதில் தொடங்கி, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற நல்ல பழகங்களில் ஈடுபடுவதற்கான நேரத்தை ஒதுக்குவது வரை உங்களுடைய நாளை பயனுள்ளதாக மாற்ற முடியும். பெரும்பாலானவர்கள் தூங்கும் இவ்வேளையில் சுற்றமும் அமைதியாக இருப்பதால், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் உங்களால் உங்கள் வேலையில் முழுமையாக ஈடுபடமுடியும். ஆனால் அதிகாலையில் சீக்கிரம் எழுவது உங்களுக்கு கடினமாக உள்ளதா?
உடல் சோர்வினால் அதிகாலையில் எழுவது சற்று கடினமாக இருக்கலாம். இந்த சோர்வுக்கு உடலின் சர்க்காடியன் ரிதம் தான் காரணம். இது 24 மணி நேர சுழற்சியாகும். நாம் எப்போது தூங்க வேண்டும்? எப்போது விழித்திருக்க வேண்டும்? என்பதை இந்த ரிதம் தான் முடிவு செய்கிறது.
சர்க்காடியன் ரிதம் மூளையில் உள்ள SCN(Suprachiasmatic Nucleus) எனும் நரம்பணுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. காலையில் வெளிச்சம் நம் கண்கள் மீது படும்போது, எப்போது எழுந்திருக்க வேண்டும் என்று SCN உடலுக்குச் சொல்கிறது. இந்நிலையில் அதிகாலையில் சீக்கிரம் எழுவதற்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். நீங்களும் அதிகாலையில் சீக்கிரம் எழ விரும்பினால் பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
வேலை இல்லாத நாட்களிலும் அலாரம் வைக்க மறக்காதீர்கள். வார இறுதி அல்லது ஓய்வு நாட்களிலும் மற்ற நாட்களை போலவே சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்ல முயற்சி செய்யலாம். இந்த பழக்கத்தினால் உடலும் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு தூங்கப் பழகிவிடும். மேலும் தூக்கமும் சீக்கிரம் வரும், இதனால் நீண்ட நேரம் தூக்கம் வராமல் அவதிப்பட வேண்டிய நிலையும் ஏற்படாது.
படுக்கைக்கு செல்வதற்கு முன் நல்ல புத்தகங்களை வாசிக்கலாம் அல்லது உங்கள் எண்ணங்களை ஒரு நோட்புக்கில் எழுதி வைக்கலாம். இரவு தூங்குவதற்கு முன் இதுபோன்ற பயனுள்ள விஷயங்களில் ஈடுபடும் போது, மறுநாள் காலையில் அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவீர்கள்.
காலை எழுந்தவுடம் உடனடியாக காலை கடன் கழிப்பது, குளியல், உடற்பயிற்சி அல்லது 5 நிமிட தியானம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது உற்சாகமாகவும், வரவிருக்கும் நாளுக்கு தயாராகவும் உங்களை உணர வைக்கிறது.
ஒரு வாரம் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள், பிறகு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். ஒரு வாரத்திற்கு பிறகும் இந்த பழக்கத்தை கடைபிடிப்பது உங்களுக்கு கடினமாக இருந்தால், உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் பொறுத்து உங்கள் விழிப்பு நேரத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம்.
படுக்கையில் தூங்குவதை தவிர டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்ற விஷயங்களை தவிர்க்கவும். முயற்சி செய்தும் 20 நிமிடங்களுக்குள் தூக்கம் வரவில்லையென்றால், தூக்கம் வரும் வரை ஏதாவது புத்தகம் வாசிக்கலாம்.
காலையில் நீங்கள் செய்யவேண்டிய விஷயங்களை திட்டமிட்டு அட்டவணை தயார் செய்து கொள்ளலாம். இதன் மூலம் காலை நேரத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக செலவிடலாம்.
படுக்கைக்கு செல்வதற்கு முன் தியானம் அல்லது சில சுவாசப் பயிற்சிகளைச செய்ய முயற்சிக்கலாம். இவ்வாறு செய்வதால் மறுநாள் காலையில் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் அழுத்தத்தை தவிர்த்திடலாம்.
நீங்கள் எழுந்திருக்க வேண்டிய நேரத்தில் இருந்து 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே அலாரம் வைக்கவும். இந்த நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். உதாரணமாக தியானம் அல்லது சில சுவாசப் பயிற்சிகளை செய்யலாம், புத்தகம் வாசிக்கலாம். நீங்கள் சீக்கிரம் எழும் பொழுது உங்கள் உடலும் புதிய அட்டவணைக்கு பழகிவிடும். இதை நடைமுறைப்படுத்த சில நாட்களுக்கு வழக்கத்தை விட 15-30 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கைக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்
சீக்கிரம் எழுவதை ஒரு வேலையாக நினைக்காதீர்கள். மாறாக மாலை அல்லது வார இறுதி நாட்களில் நீங்கள் விரும்பி செய்யும் விஷயங்களுக்கு அதிக நேரத்தைச் செலவிடும் வகையில், உங்கள் நாளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை பாருங்கள்.
காலையில் எழுந்திருப்பதில் உங்களுக்கு சிரமங்கள் இருந்தால், உங்கள் அலாரம் சத்தத்தை மாற்றி அமைக்கலாம். மேலும் உற்சாகமான பாடல் அல்லது உங்களுக்கு பிடித்த பாடலை அலாரம் சத்தமாக வைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியத்தையும் அழகையும் அள்ளி தரும் நெல்லிக்காய் !
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]