பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு வேர்க்காரணமாக இருப்பது நீங்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உடல்நல பிரச்சனைகள்
குருகிராமில் இருக்கும் சி கே பிர்லா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர். அஞ்சலி குமார் அவர்களிடம் இந்த பிரச்சினைக்கு காரணமும் அதை தீர்க்கும் வழிகளை பற்றியும் பேசினோம்.
இதுவும் உதவலாம்:சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் இந்த ஆயுர்வேத பானத்தை குடிக்கலாம்
குளியல் சோப்புகள், பபுள் பாத் மற்றும் சில பொருட்கள் நம் பிறப்புறுப்பில் இருக்கும் ph அளவை பாதிக்கும். இதனால் ஏற்படும் சமநிலையற்ற ph அளவு இது போன்ற அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இது ஒரு பூஞ்சை தொற்று. இந்த பூஞ்சையினால் தான் அரிப்பு ஏற்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், ஆன்டிபயாடிக் பயன்படுத்தும் பெண்கள் அல்லது பிறப்புறுப்பில் ph அளவை மாற்றும் அனைத்து விஷயங்களும் இந்த பூஞ்சை தொற்று ஏற்படுத்தும் காரணியாக இருக்கிறது.
வெள்ளைபடுதல் கெட்டியாகவும் , எருச்சலுடன் உண்டாகும் வெள்ளைப்பாடு இருந்தால் அது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.
இந்த பிரச்சினைக்கு இன்னொரு முக்கிய காரணம் பாக்டீரியல் வஜைனோசிஸ். இதை BV தொற்று என்றும் கூறுவார்கள். BV தொற்று நோயாளிகளுக்கு வெள்ளைபாடு மற்றும் ஒரு வகை துர்நாற்றம் உண்டாகும்.
க்ளாமிடியா,கோனோரியா, ஜெனிடல் ஹர்ப்ஸ் போன்ற நோய் களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்.
மாதவிடாய் நின்று விட்ட பிறகு, ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து விடும். பிறப்புறுப்பின் தோல் மெலிந்து விடும். இதனால் கூட அரிப்பு ஏற்படலாம்.
வயது முதிர்ந்த பெண்களுக்கு அந்த இடத்தில் கேன்சர் செல்கள் உருவாகும். எந்த வயது பெண்களாக இருந்தாலும், காரணம் தெரியாமல் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேலாக அரிப்பு இருந்தால், நீங்கள் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். அந்த பகுதியில் ஏதாவது கட்டிகள், புண்கள், சிவப்பு தன்மை, வீக்கம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலோ நிச்சயம் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
குளியல் சோப்புகள், பபுள் பாத், வாசனை திரவியங்கள் தடவிய சானிடரி பாட், வாசனை திரவியங்கள் தடவிய பான்டி லைனர், வாசனை பவுடர்கள், அந்தரங்க பகுதியை சுத்தப்படுத்தும் திரவியம் அல்லது பிறப்புறுப்பு பகுதியின் ph அளவை பாதிக்கும் அனைத்து செயல்களும் அரிப்பு அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.
டெட்டால் அல்லது சாவ்லான் போன்ற ஆன்டி செப்டிக் திரவம் கொண்டு உள்ளாடைகளை துவைத்தால் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். இது தான் அரிப்புக்கு உண்டான பொதுவான காரணம்.
சிறுநீர் கழித்த பின் பிறப்புறுப்பை வஜைனல் வாஷ்கள் கொண்டு கழுவ கூடாது. குளிக்கும் போது மிதமான சோப்புகள், தண்ணீர் கொண்டு மட்டுமே கழுவ வேண்டும். வேறு எந்த பொருட்களும் பயன்படுத்த கூடாது.
ஒரு ஈரமான காட்டன் துணியில் பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம்.
பருத்தி உள்ளாடைகள் அணிவதால் கெட்ட பாக்டீரியா மற்றும் கிருமிகள் உருவாகாது. இதனால் எந்த விதமான தொற்று மற்றும் அரிப்பு ஏற்படாது.
இதுவும் உதவலாம்:கேன்சர் முதல் பல நோய்களுக்கு மருந்தாகும் மல்பெரி பழம்
இந்த எண்ணெய் ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மையை கொண்டது. இதை பிறப்புறுப்பின் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]