சிறுநீர் தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே. இது நம் உடலில் ஏற்படும் தொற்றுகளில் இரண்டாவது பொதுவான தொற்று. நிபுணர்கள் கூற்றின்படி இரண்டில் ஒரு பெண்ணுக்கு இந்த தொற்று குறைந்த பட்சம் ஒரு தடவையாவது வரும் அபாயம் இருக்கிறது. சிறுநீரகத் தொற்று நம் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சுறுநீர் குழாய் ஆகியவற்றை பாதிக்கும். இதற்கான அறிகுறிகள் மட்டும் மாறுபடும்.
சிறுநீர்ப்பை தொற்றாக இருந்தால், உங்களுக்கு அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும் அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். அடி வயிற்றில் வலி இருக்கலாம்.
சிறுநீரக தொற்றாக இருந்தால் காய்ச்சல், குமட்டல், வாந்தி இருக்கும்.சிறுநீர் குழாய் தொற்றாக இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
ஆயுர்வேத மருத்துவம் இந்த தொற்றுக்கு சிகிச்சை முறையை வழங்குகிறது. இந்த சிகிச்சை மூலம் இந்த யுடிஐ எனப்படும் சிறுநீர் தொற்று அபாயத்தில் இருந்து வெளியே வரலாம். ஆயுர்வேத மருத்துவம் இந்த தொற்றுக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறது என்றும் அதை எப்படி தவிர்ப்பது என்றும் இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.
இதுவும் உதவலாம்:பிரியாணி இலையின் 5 ஆரோக்கிய நன்மைகள்
சிறுநீர் தொற்றும் ஆயுர்வேதமும்
பெரும்பாலானவர்கள் சிறுநீர் தொற்று வருவதற்கு முன்பு காரமான அல்லது புளிப்பான உணவை உண்டு இருப்பார்கள். மேலும் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதும், நீண்ட நேரம் சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பதும் காரணங்களாகும்.
ஏற்கனவே இதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும், பெரும்பாலான மக்கள் இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தை சார்ந்து இருக்கிறார்கள். இந்த தொற்றை ஆன்டிபயாடிக்குகள் இல்லாமல் குணமாக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கிறதா? ஆனால் இது சாத்தியம் என்பதை நாங்கள் விளக்க இருக்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்தாலும், சில குறிப்பிட்ட ஆயுர்வேத சிறப்பு உணவுகளாலும் இந்த தொற்றை எளிதில் குணமாக்கலாம்.
ஆயுர்வேத நிபுணர் ஜீடுன் சந்தன் என்பவர் இந்த ஆயுர்வேத பானத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்
- இளநீர்
- உலர் திராட்சை
- நெல்லிக்காய் பொடி
- கற்கண்டு
செய்முறை
இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பருகவும்
இளநீர், உலர் திராட்சை மற்றும் நெல்லிக்காய் பொடி ஏன் சேர்க்கப்படுகிறது?
இளநீர் உடலுக்கு நீர்சத்தை தக்க வைக்கிறது. இது வயிற்றை குளுமையாக வைப்பதால் தொற்றுகளில் இருந்து காப்பாற்றுகிறது. இளநீர் இயற்கையாக நம்மை அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்து, உடலில் உள்ள பாக்டீரியா கிருமிகளை வெளியேற்றி விடுகிறது.
நெல்லிக்காயிலுள்ள வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இது சிறுநீர்ப்பை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
உலர் திராட்சையில் குவானிலேட் சைக்ளேஸ் எனப்படும் வேதிப் பொருள் இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. பல சிறுநீரக தொற்றுகள் ஏற்படாமல் வழி செய்கிறது.
இந்த ஆயுர்வேத முறை நாம் சிறுநீர் கழிக்கும் போது நமக்கு ஏற்படும் எரிச்சல் மற்றும் வலியை குணமாக்கி விடும். இந்த பானத்தை இரவு முழுவதும் வைத்து விட்டு மறுநாள் காலையில் குடிக்க வேண்டும்.
இதுவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரை இப்படி பயன்படுத்தவும்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation